செய்திகள்
வெங்காயபயிர்

வெங்காயபயிர்களை தாக்கும் மர்ம புழுக்கள்

Published On 2021-06-09 08:46 GMT   |   Update On 2021-06-09 08:46 GMT
தற்போது வெங்காய பயிர்களில் 50க்கும் மேற்பட்ட புழுக்கள் உள்ளன. இவை பயிர்களை கடித்து துண்டித்து பயிரில் உள்ள பச்சையத்தை உறிஞ்சிவிடுவதால் வெங்காயம் விளைச்சல் முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது.
திருப்பூர்:

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் வட்டம் குண்டடம் அடுத்துள்ள முத்துக்கவுண்டம்பாளையத்தை  சேர்ந்தவர் ஈஸ்வரன். விவசாயியான இவர் தனது தோட்டத்தில் ஒரு ஏக்கரில் சின்ன வெங்காயம் நடவு செய்திருந்தார். 15 நாட்களில் அறுவடை செய்ய தயாராக இருந்த நிலையில் பயிரில் பேன் மற்றும் ஆங்காங்கே புழுக்கள் தென்பட்டதால் 2 நாட்களுக்கு முன் பூச்சி மருந்து தெளித்துள்ளார்.
 
அடுத்த நாள் வயலுக்கு சென்று பார்த்தபோது பயிர்களில் பெரும்பகுதி சருகாகி கிடந்தது. மேலும் ஒவ்வொரு வெங்காய பயிர்களிலும் 50க்கும் மேற்பட்ட புழுக்கள் மேய்ந்து கொண்டிருந்தன. வெங்காயப்பயிரின் இலைகளில் மொய்த்த புழுக்கள் அதன் பச்சையத்தை முழுவதுமாக உறிஞ்சி சருகாக்கியிருந்தது தெரியவந்தது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட விவசாயி ஈஸ்வரன் கூறியதாவது:-

வெங்காயபயிரில் புழுக்கள், பேன்கள் தாக்குவது சாதாரணமான ஒன்றாகும். அதேவேளையில் புழுக்கள் அதிகளவில் பெருகினாலும் பயிருக்கு 2 அல்லது 3 புழுக்கள்தான் தென்படும். ஆனால் தற்போது பயிர்களில் 50க்கும் மேற்பட்ட புழுக்கள் உள்ளன. இவை பயிர்களை கடித்து துண்டித்து பயிரில் உள்ள பச்சையத்தை உறிஞ்சிவிடுவதால் வெங்காயம் விளைச்சல் முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது. ஆகவே இதுகுறித்து தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தி மற்ற விவசாயிகளின் வயலுக்கு பரவாமல் தடுக்க ஆலோசனைகளை வழங்க வேண்டும் என்றார்.
Tags:    

Similar News