ஆட்டோமொபைல்
டிரையம்ப் டைகர் 900

விரைவில் இந்தியா வரும் புதிய டிரையம்ப் டைகர் 900

Published On 2020-04-23 09:49 GMT   |   Update On 2020-04-23 09:49 GMT
டிரையம்ப் நிறுவனத்தின் புதிய டைகர் 900 மோட்டார்சைக்கிள் மாடல் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.



டிரையம்ப் இந்தியா நிறுவனம் புத்தம் புதிய டைகர் 900 மோட்டார்சைக்கிளை இந்த ஆண்டு மே மாத இறுதியில் அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்தியாவில் டிரையம்ப் டைகர் 800 மோட்டார்சைக்கிள்: எக்ஸ்ஆர் மற்றும் எக்ஸ்சி என இரண்டு வேரியண்ட்களில் விற்பனை செய்யப்பட்டு வந்தது. 

புதிய டிரையம்ப் டைரக் 900 மோட்டார்சைக்கிள் ஜிடி மற்றும் ரேலி என இரண்டு வேரியண்ட்களில் அறிமுகம் செய்யப்படுகிறது. சர்வதேச சந்தையில் டைகர் 900 மோட்டார்சைக்கிள் ஸ்டான்டர்டு மற்றும் ப்ரோ என இரு வேரியண்ட்களில் கிடைக்கிறது. புதிய டைகர் 900 மோட்டார்சைக்கிளில் புதிய என்ஜின் மற்றும் சிறப்பான எலெக்டிரானிக் அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.



டிரைம்ப் டைகர் 900 மோட்டார்சைக்கிளில் பிஎஸ்6 ரக 888சிசி  இன்லைன் மூன்று சிலிண்டர்கள் கொண்ட என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 94 பிஹெச்பி பவர், 87 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. புதிய டைகர் 900 மாடலில் ஐஎம்யு சார்ந்த ஏபிஎஸ் சிஸ்டம் வழங்கப்படுகிறது.

இந்த மோட்டார்சைக்கிளில் ரெயின், ரைடர், ரோட், ஸ்போர்ட், ஆஃப்-ரோடு மற்றும் ஆஃப்-ரோடு ப்ரோ என ஆறு ரைடிங் மோட்கள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் இதில் மை டிரையம்ப் கனெக்டிவிட்டி மாட்யூல் ஸ்டான்டர்டு அம்சமாக ப்ரோ மாடல்களில் வழங்கப்படுகிறது.

டிரையம்ப் டைகர் 900 ஜிடி மாடலில் மர்சோகி சஸ்பென்ஷன் யூனிட் மற்றும் ரேலி ப்ரோ வெர்ஷனில் ஷோவா சஸ்பென்ஷன் வழங்கப்பட்டுள்ளது. இரண்டு வேரியண்ட்களிலும் பிரெம்போ ஸ்டைலிமா கேலிப்பர்கள் மற்றும் முன்புறம் இரண்டு டிஸ்க் பின்புறம் ஒற்றை டிஸ்க் பிரேக் வழங்கப்பட்டு இருக்கிறது.
Tags:    

Similar News