செய்திகள்
விண்வெளியில் தனியாக நடக்கப்போகும் வீராங்கனைகள்

முதன்முதலாக வீரர்கள் இன்றி வீராங்கனைகள் மட்டுமே விண்வெளியில் நடைப்பயணம்

Published On 2019-10-19 23:08 GMT   |   Update On 2019-10-19 23:08 GMT
முதன்முதலாக அமெரிக்காவை சேர்ந்த வீராங்கனைகள் கிறிஸ்டினா கோச்சும், ஜெசிகா மெயிரும் சர்வதேச விண்வெளி நிலையத்தை விட்டு வெளியே வந்து நேற்று நடைப்பயணம் மேற்கொண்டனர்.
வாஷிங்டன்:

அமெரிக்கா, ரஷியா உள்ளிட்ட நாடுகள் இணைந்து விண்வெளியில் சர்வதேச விண்வெளி நிலையத்தை அமைத்து ஆராய்ச்சி பணியில் ஈடுபட்டு வருகின்றன.

இந்த விண்வெளி நிலையத்துக்குள் தங்கியுள்ள வீரர்கள், வீராங்கனைகள், நிலையத்துக்கு வெளியே வந்து விண்வெளியில் நடந்தபடி பராமரிப்பு பணிகளை கவனிப்பது வழக்கம்.

வீரர்கள், வீராங்கனைகள் இணைந்து விண்வெளியில் நடைப்பயணம் மேற்கொண்டனரே தவிர, இதுவரை வீராங்கனைகள் மட்டுமே தனித்து நடைப்பயணம் மேற்கொண்டது இல்லை.

இந்தநிலையில், முதன்முதலாக அமெரிக்காவை சேர்ந்த வீராங்கனைகள் கிறிஸ்டினா கோச்சும், ஜெசிகா மெயிரும் சர்வதேச விண்வெளி நிலையத்தை விட்டு வெளியே வந்து நேற்று நடைப்பயணம் மேற்கொண்டனர்.

இந்த நடைப்பயணம் சர்வதேச விண்வெளி நிலையத்தின் மின்கட்டுப்படுத்தியை (பவர் கண்ட்ரோலர்) மாற்றுவதற்காக மேற்கொள்ளப்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன.
Tags:    

Similar News