செய்திகள்
மெட்ரோ ரெயில்

மெட்ரோ ரெயில் பயணத்தின்போது சைக்கிள் கொண்டு செல்ல பயணிகளுக்கு அனுமதி

Published On 2020-02-15 04:31 GMT   |   Update On 2020-02-15 04:31 GMT
மெட்ரோ ரெயிலில் பயணிகள் சைக்கிள்களை எடுத்து செல்லலாம் என மெட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.

சென்னை:

சென்னை மாநகர போக்கு வரத்து நெருக்கடியை குறைப்பதற்காக மெட்ரோ ரெயில் திட்டம் உருவாக்கப்பட்டது.

முதல் கட்டாக 42 கிலோ மீட்டர் தூரம் மெட்ரோ ரெயில் பாதை அமைக்கப்பட்டு மெட்ரோ ரெயில் சேவை நடந்து வருகிறது. மெட்ரோ ரெயில் நிறுவனம் சார்பில் பயணிகள், பொது மக்களை கவரும் விதமாக பல்வேறு வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் மெட்ரோ ரெயில் பயணத்தின் போது ‘ஸ்மார்ட்’ சைக்கிள் மற்றும் சிறிய அளவிலான மடக்கு சைக்கிள்களை எடுத்துச் செல்லலாம் என மெட்ரோ ரெயில் நிறுவனம் அறிவித்து உள்ளது.

இதுகுறித்து மெட்ரோ ரெயில் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

மெட்ரோ ரெயிலில் பயணம் செய்யும் பயணிகள் தங்களது சொந்த சைக்கிள்கள் மற்றும் ஸ்மார்ட், மடக்கு சைக்கிள்களை மெட்ரோ ரெயில் பயணத்தின்போது எடுத்து செல்ல அனுமதி வழங்கி உள்ளோம்.

இதன் மூலம் பயணிகள் தங்களது வீடுகளில் இருந்து கொண்டு வரும் சைக்கிளை மெட்ரோ ரெயில் பயணத்தின்போது உடன் எடுத்து செல்லலாம். ரெயிலில் யாருக்கும் இடையூறு இல்லாதவாறு கொண்டு செல்ல வேண்டும்.

இதன் மூலம் பயணிகள், பொதுமக்கள் பெரிதும் பயன் பெறுவார்கள். மெட்ரோ ரெயில் நிலையங்களுக்கு ஆட்டோவில் வரும் பயணிகளுக்கு ஏற்படும் கூடுதல் செலவு மிச்சப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News