தொழில்நுட்பம்
கேலக்ஸி எஸ்10 சீரிஸ்

சாம்சங் ஸ்மார்ட்போன் விலை ரூ. 17,100 வரை குறைப்பு

Published On 2020-02-15 04:33 GMT   |   Update On 2020-02-15 04:33 GMT
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எஸ்10 மற்றும் கேலக்ஸி ஏ20எஸ் ஸ்மார்ட்போன்களின் விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன் முழு விவரங்களை பார்ப்போம்.



சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி ஏ20எஸ் மற்றும் கேலக்ஸி எஸ்10 சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் விலை இந்தியாவில் குறைக்கப்பட்டுள்ளது. இந்திய சந்தையில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அறிமுகமான கேலக்ஸி ஏ20எஸ் 3 ஜி.பி. ரேம் + 32 ஜி.பி. மெமரி மற்றும் 4 ஜி.பி. ரேம் + 64 ஜி.பி. மெமரி என இரண்டு வேரியண்ட்களில் வெளியிடப்பட்டது.

இதுவரை 3 ஜி.பி. ரேம் மாடல் ரூ. 10,999 விலையிலும் 4 ஜி.பி. ரேம் மாடல் ரூ. 13,999 விலையில் விற்பனை செய்யப்பட்டு வந்தது. தற்சமயம் கேலக்ஸி ஏ30எஸ் 4 ஜி.பி. ரேம் மாடல் விலை ரூ. 1000 குறைக்கப்பட்டு ரூ. 12,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. 

கேலக்ஸி எஸ்10 ஸ்மார்ட்போனின் 128 ஜி.பி. மெமரி மாடல் ரூ. 16,100 விலை குறைக்கப்பட்டு தற்சமயம் ரூ. 54,900 விலையிலும், கேலக்ஸி எஸ்10 பிளஸ் 128 ஜி.பி. மாடல் விலை ரூ. 17,100 குறைக்கப்பட்டு ரூ. 61,900 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. 

இதே போன்று கேலக்ஸி எஸ்10இ 128 ஜி.பி. மாடல் விலை ரூ. 8000 குறைக்கப்பட்டு தற்சமயம் ரூ. 47,900 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. புதிய விலை ஏற்கனவே சாம்சங் மற்றும் அமேசான் இந்தியா வலைதளங்களில் மாற்றப்பட்டு விட்டது.



கேலக்ஸி எஸ்10 சீரிஸ் ஸ்மார்ட்போன்களில் சாம்சங் எக்சைனோஸ் 9 சீரிஸ் 9820 பிராசஸர், டைனமிக் AMOLED டிஸ்ப்ளே, அல்ட்ராசோனிக் கைரேகை சென்சார் வழங்கப்பட்டுள்ளது. 

புகைப்படங்களை எடுக்க கேலக்ஸி எஸ்10 மற்றும் கேலக்ஸி எஸ்10 பிளஸ் மாடல்களில் 12 எம்.பி. டூயல் பிக்சல் மற்றும் டூயல் அப்ரேச்சர் பிரைமரி சென்சார், 16 எம்.பி. அல்ட்ரா வைடு லென்ஸ், 12 எம்.பி. டெலிபோட்டோ லென்ஸ் வழங்கப்பட்டுள்ளது. கேலக்ஸி எஸ்10இ மாடலில் டெலிபோட்டோ லென்ஸ் வழங்கப்படவில்லை. 

இவற்றில் 10 எம்.பி. டூயல் பிக்சல் செல்ஃபி கேமராவும், கேலக்ஸி எஸ்10 பிளஸ் மாடலில் இரண்டாவது 8 எம்.பி. சென்சார் வழங்கப்பட்டுள்ளது. கேலக்ஸி எஸ்10, எஸ்10 பிளஸ், மற்றும் எஸ்10இ மாடல்களில் முறையே 3400 எம்.ஏ.ஹெச்., 4100 எம்.ஏ.ஹெச். மற்றும் 3100 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்பட்டுள்ளது.



சிறப்பம்சங்களை பொருத்தவரை கேலக்ஸி ஏ30எஸ் ஸ்மார்ட்போனில் 6.4 இன்ச் ஹெச்.டி. பிளஸ் இன்ஃபினிட்டி வி TFT ஸ்கிரீன், ஸ்னாப்டிராகன் 450 பிராசஸர், அதிகபட்சம் 4 ஜி.பி. ரேம், ஆண்ட்ராய்டு பை இயங்குதளம் வழங்கப்பட்டுள்ளது. புகைப்படங்களை எடுக்க 13 எம்.பி. பிரைமரி கேமரா, f/1.8, 8 எம்.பி. 120° அல்ட்ரா வைடு மற்றும் 5 எம்.பி. டெப்த் சென்சார் வழங்கப்பட்டுள்ளது.

முன்புறம் 8 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.0 வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் ஸ்மார்ட்போனின் பின்புறம் 3டி கிளாஸ் பேக் மற்றும் கிரேடியன்ட் ஃபினிஷ் செய்யப்பட்டுள்ளது. மேலும் பிரத்யேக டூயல் சிம் ஸ்லாட்கள், மைக்ரோ எஸ்.டி. ஸ்லாட், பின்புறம் கைரேகை சென்சார், 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி மற்றும் 15 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News