உள்ளூர் செய்திகள்
ஆதிகேசவ பெருமாள்

வைகுண்ட ஏகாதசியையொட்டி கன்னியாகுமரி பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் திறப்பு

Published On 2022-01-11 10:03 GMT   |   Update On 2022-01-11 10:03 GMT
கன்னியாகுமரி மாவட்ட பெருமாள் கோவில்களில் சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சி நாளை மறுநாள் நடக்கிறது.
கன்னியாகுமரி:

பெருமாள் கோவில்களில் நடைபெறும் முக்கியமான விழாக்களில் வைகுண்ட ஏகாதசியும் ஒன்று. இந்த ஆண்டுக்கான வைகுண்ட ஏகாதசி விழா நாளை மறுநாள் (வியாழக்கிழமை) நடக்கிறது. இதையொட்டி பெருமாள் கோயில்களில் சொர்க்க வாசல் திறக்கப்பட்டு சிறப்பு வழிபாடுகள் நடை பெறுகிறது.

கன்னியாகுமரி விவே கானந்தபுரத்தில் உள்ள விவேகானந்த கேந்திர கடற்கரை வளாகத்தில் அமைந்துஉள்ள திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் வெங்கடாஜலபதி கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா நாளை மறுநாள் (வியாழக் கிழமை) நடக்கிறது. 

இதையொட்டி நாளை மறுநாள் அதிகாலை 5 மணிக்கு சுப்ரபாத தரிசனமும் அதைத்தொடர்ந்து கோவி லின் வடக்குப் பக்கம் மலர்களால் அமைக்கப்பட்டுள்ள வடக்கு வாசல் வழியாக பக்தர்கள் கோவிலுக்குள் சென்று தரிசனம் செய்வதற்கு அனுமதிக்கும் நிகழ்ச்சியும் நடக்கிறது.

வைகுண்ட ஏகாதசியை ஒட்டி கன்னியாகுமரி திருப் பதி வெங்கடாசலபதி கோவிலில் பூலங்கிசேவை, சிறப்பு வழிபாடுகள், விசேஷ பூஜைகள், அலங்கார தீபாராதனை, மாலையில் தோமாலை சேவை, இரவு பள்ளியறை எழுந்தருளும் ஏகாந்த சேவை நிகழ்ச்சி போன்றவை நடக்கிறது. 

மேலும் குமரி மாவட்டத் தில் பிரசித்தி பெற்ற 108 திவ்ய தரிசனங்களில் ஒன்றான திருப்பதிசாரம் திருவாழி மார்பன் திருக்கோவில், பறக்கைமதுசூதன பெருமாள் கோவில் போன்ற கோவில்களில் நாளை மறுநாள் அதிகாலையில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடக்கிறது. திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவில், 

வடிவீஸ்வரம் இடர் தீர்த்த பெருமாள் கோவில், சுசீந்திரம் துவாரகை கிருஷ்ணன் கோவில், ஏழகரம் பெருமாள் கோவில், நாகர்கோவில் கிருஷ்ணன் கோவில், மகாதானபுரம் நவநீத சந்தாண கோபால கிருஷ்ணசாமி கோவில் உள்பட குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து பெருமாள் கோயில்களிலும் வைகுண்ட ஏகாதசி விழா நாளை மறுநாள் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. 

இதையொட்டி இந்த கோவில்களில் நாளை ஒருநாள் அதிகாலையில் சிறப்பு அபிஷேகம் நடக்கிறது. அதனைத் தொடர்ந்து சொர்க்கவாசல் திறக்கப்பட்டு பெருமாள் பக்தர்களுக்கு காட்சி கொடுப்பார்.

திருப்பதிசாரம் திருவாழி மார்பன் கோவில், பறக்கை மதுசூதன பெருமாள் கோவில், வடிவீஸ்வரம் இடர்தீர்த்த பெருமாள் கோவில், திருவட்டார் ஆதிகேசவப் பெருமாள் கோவில் ஆகிய கோவில்களில் உற்சவ மூர்த்தி பவனி நடக்கிறது.
Tags:    

Similar News