ஆன்மிகம்
சிதம்பரம் நடராஜர் கோவிலில் தனுர் வியதீபாதம்

சிதம்பரம் நடராஜர் கோவிலில் தனுர் வியதீபாதம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் வீதிவலம் வந்தனர்

Published On 2020-12-23 07:27 GMT   |   Update On 2020-12-23 07:27 GMT
நடராஜர் கோவிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சிவகாமசுந்தரி சமேத நடராஜபெருமானை திருப்பள்ளி எழுச்சி நேரத்தில் வழிபட்டனர்.
மார்கழி மாதம் என்றாலே தெய்வங்களுக்கு உகந்த மாதம் என போற்றப்படுகிறது. இந்நிலையில் கடந்த 17-ந்தேதி மார்கழி மாதம் பிறந்தது. இந்த மாதத்தில் அதிகாலையில் பிரம்ம முகூர்த்த நேரத்தில் கோவில்களில் திருப்பள்ளி எழுச்சி வழிபாடு சிறப்பாக நடப்பது வழக்கம். மார்கழி மாதத்தில் வியதீபாதம் என்று யோகம் வரும் நாளில் நடராஜரை தரிசனம் செய்தால் சர்வ பாவங்கள் நீங்கி பெரும் புண்ணியங்களும், அனைத்து செல்வங்களும் கிடைக்கும் என்பது ஐதீகம்.

வியதீபாதம் என்ற சொல் நாளடைவில் மாறி விதிபாதம், மிதிபாதம் என்று மாறி விட்டது. இதன்படி தனுர் வியதீபாத யோகமான நேற்று அதிகாலையில் சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சிவகாமசுந்தரி சமேத நடராஜபெருமானை திருப்பள்ளி எழுச்சி நேரத்தில் வழிபட்டனர்.

தொடர்ந்து ஏராளமான பெண்கள் கோவில் கிழக்கு கோபுர வாசல் அருகே தீபம் ஏற்றி வழிபட்டனர். அதன்பிறகு வீதிவலம் புறப்பட்டனர். 4 வீதிகளிலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வலம் வந்தனர்.
Tags:    

Similar News