தமிழ்நாடு
வாழப்பாடி பகுதியில் ஒரு வயலுக்கு இரைதேடி வந்த கொக்குகளை படத்தில் காணலாம்

வாழப்பாடி பகுதிக்கு இரைதேடி வரும் பலவிதமான பறவைகள்

Published On 2022-01-23 07:12 GMT   |   Update On 2022-01-23 07:12 GMT
வாழப்பாடி பகுதி நீர்நிலைகளில் தண்ணீர் நிரம்பியுள்ளதால், இரைதேடி பலவிதமான பறவைகள் வருகின்றன.
வாழப்பாடி:

சேலம் மாவட்டம் வாழப்பாடி, பெத்தநாயக்கன்பாளையம், அயோத்தியாப்பட்டணம், ஏத்தாப்பூர், பேளூர், கருமந்துறை, அருநூற்றுமலை பகுதிகளில் பெரும்பாலான மக்கள் விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த தொழில்களையே பிரதானமாக கொண்டுள்ளனர்.

வாழப்பாடி பகுதியில், 10 ஆண்டுக்கு பிறகு கடந்தாண்டு இறுதியில் பெய்த பலத்த மழையால், வசிஷ்டநதி, கரியக்கோயில் ஆறு உள்ளிட்ட, ஆறுகள், நீரோடைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. ஆணைமடுவு மற்றும் கரியக்கோயில் அணைகள் நிரம்பின. பெரும்பாலான ஏரி, குளம், குட்டை, பாலி, சுணைகளில் தண்ணீர் தேங்கியுள்ளது.

இதனால், வாழப்பாடி பகுதிக்கு வெண்ணிற கொக்கு, நாரை, நீர்க்காகம் உள்ளிட்ட நீர்நிலைகளை வாழிடமாகக் கொண்ட பறவையினங்கள், பல்வேறு பகுதியில் இருந்து வருகை தந்துள்ளன.  

இவற்றில் வெண்ணிற கொக்குகள் மற்றும் நாரைகளும், நீர்நிலைகளில் மட்டுமின்றி கிராமப்புற வயல்வெளிகளில் கூட்டம் கூட்டமாக முகாமிட்டு இரைத்தேடி வருகின்றன. ஏராளமான பறவைகள் சுற்றித்திரியும் காட்சிகள், காண்போர் கண்களுக்கு விருந்தளித்து வருகிறது.
Tags:    

Similar News