ஆன்மிகம்
திருவாதிரை ஆருத்ரா அபிஷேகம்

திருவாதிரை ஆருத்ரா அபிஷேகம் எப்போது?

Published On 2020-01-09 08:36 GMT   |   Update On 2020-01-09 08:36 GMT
திருவாதிரை நட்சத்திர நேரம் இன்று பிற்பகல் 3.45 மணிக்கு தொடங்கி நாளை பிற்பகல் 3.31 மணிக்கு நிறைவு பெறுகிறது. இந்த இடைப்பட்ட நேரத்தில் ஆருத்ரா சிறப்பு அபிஷேகமும், ஆருத்ரா தரிசனமும் நடைபெறும்.
திருவாதிரை நட்சத்திர நேரம் இன்று பிற்பகல் 3.45 மணிக்கு தொடங்கி நாளை பிற்பகல் 3.31 மணிக்கு நிறைவு பெறுகிறது. இந்த இடைப்பட்ட நேரத்தில் ஆருத்ரா சிறப்பு அபிஷேகமும், ஆருத்ரா தரிசனமும் நடைபெறும். சிவாலயங்களில் தங்களது பூஜை நேரங்களுக்கு ஏற்ப அபிஷேகமும், தரிசனமும் மாறுபடும்.
திருவாதிரை ஆருத்ரா தரிசனத்திற்கு புகழ் பெற்ற சிதம்பரத்தில் கடந்த 1-ந்தேதி தொடங்கி விழா நடந்து வருகிறது. இன்று தேர் திருவிழா நடக்கிறது.

நாளை (வெள்ளிக்கிழமை) அதிகாலை 3.30 மணிக்கு நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்படும். நாளை மதியம் 12 மணிக்கு ஆருத்ரா தரிசனம் நிகழ்ச்சி நடைபெறும்.

உத்தரகோசமங்கையில் இன்று காலை நடராஜருக்கு சாத்தப்பட்டு இருந்த சந்தன காப்பு களையப்பட்டது. இன்று இரவு 11 மணிக்கு மேல் அபிஷேக ஆராதனைகள் நடத்தப்படும். நடராஜருக்கு 32 வித அபிஷேகங்கள் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நாளை காலை ஆருத்ரா தரிசனம் நடத்தப்படும்.
Tags:    

Similar News