செய்திகள்
முகாமில் குவிந்த மாற்றுத்திறனாளிகள்.

கலெக்டர் அலுவலகத்தில் குவிந்த மாற்றுத்திறனாளிகள்

Published On 2021-09-17 10:10 GMT   |   Update On 2021-09-17 10:10 GMT
அடுத்து வரக்கூடிய முகாம்களை சீர்படுத்த வேண்டும். இல்லையென்றால் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக மாற்றுத்திறனாளிகள் தெரிவித்துள்ளனர்.
திருப்பூர்:

திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வாரம்தோறும் வெள்ளிக் கிழமைகளில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது .

இந்த முகாமில் மாற்றுத்திறனாளிகளிடம் இருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்படுகின்றன. மருத்துவர்கள் ஒத்துழைப்போடு மருத்துவ சேவைகளும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் வெள்ளிக்கிழமையான இன்று நடைபெற்ற முகாமில் மாற்றுத்திறனாளிகள் காலை 6 மணி முதலே காத்து கிடந்தனர். 

அடிப்படை வசதிகள் இல்லாததால் மாற்றுத்திறனாளிகள் கடும் அவதியடைந்தனர். மேலும் மருத்துவர்கள் இல்லாததால் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகினர். கூட்ட நெரிசலால் கொரோனா பரவும் அபாயம் ஏற்பட்டது. 

எனவே அடுத்து வரக்கூடிய முகாம்களை சீர்படுத்த வேண்டும். இல்லையென்றால் போராட்டத்தில் ஈடுபடபோவதாக மாற்றுத்திறனாளிகள் தெரிவித்துள்ளனர்.
Tags:    

Similar News