செய்திகள்
சரத்குமார்

விவசாயிகளின் கோரிக்கைகளை பரிசீலித்து தீர்வு காணவேண்டும்- மத்திய அரசுக்கு, சரத்குமார் வலியுறுத்தல்

Published On 2020-12-04 14:36 GMT   |   Update On 2020-12-04 14:36 GMT
டெல்லியில் போராடும் விவசாயிகளின் கோரிக்கைகளை பரிசீலித்து தீர்வு காணவேண்டும் என மத்திய அரசை சரத்குமார் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை:

சமத்துவ மக்கள் கட்சி தலைவர் ஆர்.சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

‘உண்டி கொடுத்தோர், உயிர் கொடுத்தோரே’ என்ற வரிகளின்படி உலகிலுள்ள மனிதர்களுக்கும், பிற ஜீவராசிகளுக்கும் தேவையான உணவு உற்பத்தி செய்து வழங்கும் விவசாயிகள் உயிர் கொடுப்பவர்களாகவே மதிக்கப்பட வேண்டியவர்கள்.உயிர்கொடுக்கும் விவசாயிகளின் வலுவான எதிர்ப்புக்குரல் தலைநகரான டெல்லியில் எழும்போது, விவசாயிகளிடம் கனிவோடும், சிரத்தையோடும் பேச்சுவார்த்தை நடத்தி வேளாண் சட்டம் குறித்து அவர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் விதமாக அவர்களின் கேள்விகளுக்கு உரிய விளக்கம் அளித்து, விவசாயிகளின் நியாயமான கோரிக்கைகளை பரிசீலித்து மத்திய அரசு சுமூகமான தீர்வு காண வேண்டும்.

மேலும், தேசத்தின் முதுகெலும்பான விவசாயம் தழைத்தோங்கவும், பொருளாதாரம் வளர்ச்சி காணவும் விவசாயிகளை ஊக்கப்படுத்தி, மாநில வாரியாக விவசாய பிரதிநிதிகளுடன் ஆக்கப்பூர்வமான திட்டங்களை கலந்தாலோசித்த பின்னர் சட்டவடிவம் கொடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.
Tags:    

Similar News