ஆன்மிகம்
திருச்செந்தூர் கோவிலில் திருநீறு பூசி வெள்ளை நிறத்தில் தெய்வானை யானை வீதி உலா

திருச்செந்தூர் கோவிலில் திருநீறு பூசி வெள்ளை நிறத்தில் தெய்வானை யானை வீதி உலா

Published On 2020-07-29 05:38 GMT   |   Update On 2020-07-29 05:38 GMT
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் உள்பிரகாரத்தில், உடல் முழுவதும் திருநீறு பூசி வெள்ளை நிறத்தில் காட்சி அளித்த தெய்வானை யானை, தங்க சப்பரத்தில் சுந்தரமூர்த்தி நாயனாரும் வீதி உலா சென்றனர்.
ஆடி சுவாதி நட்சத்திர தினத்தில் சுந்தரமூர்த்தி நாயனாருக்கு திருக்கைலாய மலையில் சிவபெருமான், ஐராவதம் (வெள்ளை யானை) உருவத்தில் காட்சி கொடுத்தார். இதனை நினைவுகூரும் வகையில், ஆடி சுவாதி நட்சத்திர தினமான நேற்று திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் அதிகாலையில் நடை திறக்கப்பட்டு, விசுவரூப தீபாராதனையும், தொடர்ந்து மற்றகால பூஜைகளும் நடந்தது.

மாலையில் கோவில் உள்பிரகாரத்தில், உடல் முழுவதும் திருநீறு பூசி வெள்ளை நிறத்தில் காட்சி அளித்த தெய்வானை யானையும், தங்க சப்பரத்தில் சுந்தரமூர்த்தி நாயனாரும் வீதி உலா சென்றனர். 108 மகாதேவர் சன்னதியில் வெள்ளைநிற தெய்வானை யானை முன்பு சேரமான்பெருமானும், மாணிக்கவாசகரும் எழுந்தருளி காட்சி கொடுத்தனர். கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, வெளிப்பிரகாரத்தில், தெருக்களிலும் வீதி உலா நடைபெறவில்லை. கோவிலிலும் பக்தர்களை அனுமதிக்கவில்லை.
Tags:    

Similar News