செய்திகள்
எம்எல்ஏ-க்கள் குழு அமைப்பு

கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஆலோசனை வழங்க எம்எல்ஏ-க்கள் ஆலோசனை குழு அமைப்பு

Published On 2021-05-16 14:26 GMT   |   Update On 2021-05-16 14:26 GMT
அனைத்து சட்டமன்ற கட்சிகள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி, எம்எல்ஏ-க்கள் ஆலோசனை குழு அமைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா அதிகரித்து வருகிறது. கொரோனா தொற்றை கட்டுப்படுத்த அனைத்து சட்டமன்ற கட்சித்  தலைவர்கள் கூட்டத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடந்த சில தினங்களுக்கு முன் கூட்டினார். அப்போது ஆலோசனை வழங்க எம்எல்ஏ-க்கள் குழு அமைக்கப்படும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அதன்படி கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த ஆலோசனை வழங்க முதலமைச்சர் தலைமையிலான எம்எல்ஏ-க்கள் ஆலோசனை குழு அமைக்கப்பட்டுள்ளது.

இந்த குழுவில் ஒவ்வொரு கட்சியில் இருந்தும் ஒரு எம்எல்ஏ இடம் பிடித்துள்ளனர்.

திமுக- எழிலன்
அதிமுக- சி. விஜயபாஸ்கர்
பாஜக- நயினார் நாகேந்தின்
பாமக- ஜிகே மணி
காங்கிரஸ்- முனிரத்தினம்
மதிமுக- சதன் திருமலைக்குமார்
விடுதலை சிறுத்தைகள்: பாலாஜி
கொமதேக- ஈஸ்வரன்
தமிழக வாழ்வுரிமை கட்சி- வேல்முருகன்
புரட்சி பாரதம்- ஜெகன் மூர்த்தி
சிபிஐ- ராமச்சந்திரன்
சிபிஎம்- நாகை மாலி
மனிதநேய மக்கள் கட்சி- ஜவாஹிருல்லா

இந்த ஆலோசனை குழு கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவது குறித்து அவ்வப்போது கூடி ஆலோசிக்கும். 
Tags:    

Similar News