செய்திகள்
ராணுவ வீரர்கள்

தலிபான்களுக்கு பயந்து தஜிகிஸ்தானுக்கு தப்பிச் சென்ற ஆப்கானிஸ்தான் வீரர்கள்

Published On 2021-07-05 16:47 GMT   |   Update On 2021-07-05 16:47 GMT
ஆப்கானிஸ்தானில் முகாமிட்டிருந்த நேட்டோ படையினர் வெளியேறியிருக்கும் நிலையில் தலிபான்களின் தாக்குதல்கள் தீவிரமடைந்துள்ளன.
காபூல்:

ஆப்கானிஸ்தானில் தலிபான்களின் தாக்குதலுக்கு பயந்து ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த 1,000க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் அண்டை நாடான தஜிகிஸ்தானுக்கு தப்பிச் சென்றதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தங்களது உயிர்களைக் காப்பாற்றிக் கொள்வதற்காக அவர்கள் பின்வாங்கியதாக தஜிகிஸ்தானின் எல்லைப் பாதுகாப்புப் படை கூறியுள்ளது.

கடந்த சில வாரங்களாக ஆப்கானிஸ்தானின் பல்வேறு இடங்களிலும் தலிபான் இயக்கத்தினர் தாக்குதலைத் தீவிரப்படுத்தியுள்ளனர். ஏற்கனவே 30க்கும் மேற்பட்ட மாவட்டங்களை அரசுப் படைகளிடம் இருந்து கைப்பற்றியுள்ள தலிபான்கள், தொடர்ந்து முன்னேறி வருகின்றனர். வடக்கு ஆப்கானிஸ்தானின் பெரும் பகுதி, தலிபான்களின் கட்டுப்பாட்டில் வந்துள்ளது.  



ஆப்கானிஸ்தானில் கடந்த 20 ஆண்டுகளாக பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த நேட்டோ படையினர் வெளியேறியிருக்கும் நிலையில் இந்தத் தாக்குதல்கள் தீவிரமடைந்துள்ளன. 

வடக்கு பகுதியில் தலிபான்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பெரிய அளவில் தாக்குதலை தொடங்க உள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. 
Tags:    

Similar News