உள்ளூர் செய்திகள்
FILEPHOTO

கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்த போராட்டம் அறிவிப்பு

Published On 2022-05-07 09:27 GMT   |   Update On 2022-05-07 09:27 GMT
பருத்தியை மீண்டும் அத்தியாவசிய பட்டியலுக்கு கொண்டு வரக்கோரி ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
கரூர்:


பருத்தியை மீண்டும் அத்தியாவசியப் பட்டியலுக்கு கொண்டு வரவேண்டும் என வலியுறுத்தி அரசுகளின் கவனத்தை ஈர்க்க வரும் 13 ஆம் தேதி ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம்  செய்யப்போவதாக கரூர் நெசவு, பனியன் தொழிற்சாலை உரிமையாளர்கள் சங்க பொதுக்குழுக்  கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டு உள்ளது.

கரூர் நெசவு மற்றும் பனியன் தொழிற்சாலை உரிமையாளர்கள் சங்க பொதுக்குழுக் கூட்டம்  தலைவர் ஆர்.தனபதி தலைமையில் சங்க அலுவலகத்தில நேற்று நடைபெற்றது. செயலாளர்  எஸ்.சுரேந்தர் வரவேற்று, நூல் வலை உயர்வு பாதிப்பு பற்றி விளக்கமளித்தார்.

கூட்டத்தில், நாட்டின் பொருளாதாரத்திற்கு பல வகையில் உறுதுணையாக இருந்து வரும் ஜவுளித்தொழில் கடுமையான நூல் விலை உயர்வால் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

பருத்தியை மீண்டும் அத்தியாவசியப் பட்டியலுக்குள் கொண்டு வரவேண்டும். நூற்பாலைகள்  மொத்த உற்பத்தியில் குறிப்பிட்ட சதவீதம் மட்டுமே ஏற்றுமதி செய்ய அனுமதிக்கவேண்டும்.  அப்பொழுதுதான் உள்நாட்டு தேவை பூர்த்தி அடையும். இப்படி பெரும் நூற்பாலைகளை கட்டு ப்படுத்தவேண்டும்.  

விவசாயிகள் பஞ்சு விற்கும் விலைக்கும் நூற்பாலைகளுகு வரும் பஞ்சின் விலைக்கும் ஏணி வைத்தாலும் எட்டாத வித்தியாசம் உள்ளது. இங்கு பதுக்கல் நடக்கிறது. பஞ்சை அத்தியாவசியப் பட்டியலில் சேர்ப்பது மட்டுமே பதுக்கலுக்கு ஒரே தீர்வாக இருக்கும்.

அரசுகளின் கவனத்தை ஈர்க்க வரும் 13ம் தேதி ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் செய்வது என்று முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இம்மாத இறுதிக்குள் நல்ல தீர்வு கிடைக்காவிட்டால் முதலீட்டின் பாதுகாப்பு கருதி உற்பத்தி நிறுத்தம் செய்வது என முடிவெடுக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News