கிச்சன் கில்லாடிகள்
பிரெட் சீஸ் பைட்ஸ்

15 நிமிடத்தில் செய்யலாம் பிரெட் சீஸ் பைட்ஸ்

Published On 2022-04-21 09:21 GMT   |   Update On 2022-04-21 09:21 GMT
வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டே 10 நிமிடத்தில் சூப்பரான ஸ்நாக்ஸ் செய்யலாம். இன்று பிரெட் சீஸ் பைட்ஸ் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :

பிரட் - 4
சீஸ் துருவல் - தேவையான அளவு
சோள மாவு - 3 ஸ்பூன்
பிரெட் தூள் - 1/2 கப்
எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை:

பிரெட்டின் ஓரங்களை வெட்டி விட்டு முக்கோண வடிவில் வெட்டிக்கொள்ளவும்.

அடுத்து அதன் மீது துருவிய சீஸை தூவி, அதன் மேல் மற்றொரு பிரெட்டை வைக்கவும்.

சோள மாவில் தண்ணீர் சேர்த்து கரைத்து கொள்ளவும்.

சீஸ் வைத்த பிரெட் துண்டை சோள மாவில் நனைத்து பிரெட் தூளில் பிரட்டி வைக்கவும். இவ்வாறு அனைத்தையும் செய்து வைக்கவும்.

கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் செய்து வைத்த பிரெட்டை போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.

இப்போது சூப்பரான பிரெட் சீஸ் பைட்ஸ் ரெடி.
Tags:    

Similar News