லைஃப்ஸ்டைல்
ஆகாஷ் முத்திரை

சைனஸ் தொந்தரவு, தலைவலி, காது வலியை குணமாக்கும் முத்திரை

Published On 2021-06-26 02:26 GMT   |   Update On 2021-06-26 02:26 GMT
இந்த முத்திரையை உட்கார்ந்து கொண்டு செய்யவேண்டும். நடந்து கொண்டு செய்யக்கூடாது. இந்த முத்திரை பயிற்சியால் உடல் உள் உறுப்புகள் அனைத்தும் நன்றாக இயங்குகின்றது.
நமது பெருவிரல் நுனியும் நடு விரல் நுனியும் தொடும்படியும், மற்ற விரல்கள் நேராக நீட்டியும் வைத்துக்கொள்ளவேண்டும்.

இந்த முத்திரை பயிற்சி உடல் உறுப்புகளின் வெற்றிடத்தை அதிகப்படுத்தி நன்றாக இயங்கச்செய்கிறது. அதாவது நமது மண்டையோடு (கபாலம்), மூக்கின் பின்புறம், சைனஸ் பாதை, காது, வாய், தொண்டை மற்றும் வயிறு பாகங்களில் வெற்றிடம் உள்ளது. தேவையான வெற்றிடம் இருப்பதால் அது நன்றாக இயங்குகிறது. அந்த இடத்தில் அதிகமாக தண்ணீரோ அல்லது காற்றோ அடைத்துக்கொண்டால் அந்த உறுப்புகள் இயங்குவதில் பிரச்சனையும் நோயும் வருகிறது. இந்த
முத்திரை
பயிற்சி தேவையான வெற்றிடத்தை ஏற்படுத்தி நன்றாக இயங்கவைக்கிறது. இந்த முத்திரை நல்ல எண்ணங்களை மனதில் உருவாக்குகின்றது.

இந்த முத்திரையை உட்கார்ந்து கொண்டு செய்யவேண்டும். நடந்து கொண்டு செய்யக்கூடாது. இந்த முத்திரை பயிற்சியால் உடல் உள் உறுப்புகள் அனைத்தும் நன்றாக இயங்குகின்றது.

சைனஸ் தொந்தரவு, தலைவலி, காது வலிகளை குணப்படுத்தும். நெஞ்சுப்படபடப்பை குறைக்கும்.கல்சியம் சத்து அதிகரித்து எலும்புகள் வலுப்பெறும்.இந்த முத்திரையை தினமும் 45 நிமிடங்கள் அல்லது குறைந்தது 15 நிமிடங்களாவது செய்வது நல்ல பலனைத்தரும்.காலை 2 மணிமுதல் 6 மணிக்குள் எந்த நேரத்தில் செய்தாலும் அதிக பலன் தரும். இந்த முத்திரையை அமர்ந்திருந்து மட்டுமே செய்தல் வேண்டும்.
Tags:    

Similar News