செய்திகள்
திமுக

திருப்பூர் மாவட்டத்தில் 7 ஒன்றியங்களில் தி.மு.க. வெற்றி

Published On 2020-01-11 10:18 GMT   |   Update On 2020-01-11 10:18 GMT
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 13 ஊராட்சி ஒன்றியங்களில் 7இடங்களில் தி.மு.க.வும், 4 இடங்களில் அ.தி.மு.க.வும், சுயேச்சைகள் 2 இடங்களிலும் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளனர்.
திருப்பூர்:

திருப்பூர் மாவட்டத்தில் 13 ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளது. மொத்தம் உள்ள 170 ஊராட்சி ஒன்றிய குழு வார்டு உறுப்பினர்களில் 57 இடங்களை அ.தி.மு.க.வும், 75 இடங்களை தி.மு.க.வும், காங்கிரஸ் 9 இடத்தையும், தே.மு.தி.க. 4 இடத்தையும், பாரதிய ஜனதா 3 இடத்தையும், சுயேச்சைகள் 18 இடத்தையும், ம.தி.மு.க. ஒரு இடத்தையும், இந்திய கம்யூனிஸ்டு 2 இடத்தையும், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு ஒரு இடத்தையும் பிடித்தது.

இன்று ஒன்றிய குழு தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தல் நடைபெற்றது. இதில் தாராபுரம் ஒன்றிய குழு தலைவராக தி.மு.க.வை சேர்ந்த செந்தில் குமார் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.

அவினாசி ஒன்றிய குழு தலைவராக அ.தி.மு.க.வை சேர்ந்த ஜெகதீசன் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த ஒன்றியத்தில் உள்ள 19 வார்டு உறுப்பினர்களில் ஜெகதீசனுக்கு 12 வாக்குகள் கிடைத்தது. அவரை எதிர்த்து போட்டியிட்ட தி.மு.க.வை சேர்ந்த சத்யபாமா 7 வாக்குகள் பெற்றார்.

வெள்ளகோவில் ஒன்றியக்குழு தலைவராக அ.தி.மு.க.வை சேர்ந்த சுதர்சன் தேர்ந்தெடுக்கப்பட்டார். காங்கயம் ஒன்றிய குழு தலைவராக சுயேச்சையாக போட்டியிட்ட தினேஷ் குமார் வெற்றி பெற்றார்.

மடத்துக்குளம் ஒன்றிய தலைவராக தி.மு.க.வை சேர்ந்த காவ்யா வெற்றி பெற்றார். மூலனூர் ஒன்றிய தலைவராக தி.மு.க.வை சேர்ந்த சுமதி வெற்றி பெற்றார். குண்டடம் ஒன்றிய குழு தலைவராக சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்ற குப்புசாமி வென்றார். இவர் ஒன்றிய தே.மு.தி.க. செயலாளராக உள்ளார். அ.தி.மு.க.கூட்டணியில் சீட் கிடைக்காததால் சுயேச்சையாக போட்டியிட்டு வென்றார்.

திருப்பூர் ஒன்றிய குழு தலைவராக அ.தி.மு.க.வை சேர்ந்த சொர்ணம்பாள் வெற்றி பெற்றார். பல்லடம் ஒன்றிய குழு தலைவராக தி.மு.க.வை சேர்ந்த தேன்மொழி தேர்ந்தெடுக்கப்பட்டார். குடிமங்கலம் ஒன்றிய குழு தலைவராக அ.தி.மு.க.வை சேர்ந்த சுகந்தி முரளி தேர்வு செய்யப்பட்டார்.

பொங்கலூர் ஒன்றிய குழு தலைவராக தி.மு.க.வை சேர்ந்த குமார் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஊத்துக்குளி ஒன்றியத்தில் தி.மு.க.வை சேர்ந்த பிரேமா வெற்றி பெற்றார். உடுமலை ஒன்றிய குழு தலைவராக தி.மு.க.வை சேர்ந்த மகாலட்சுமி தேர்வு செய்யப்பட்டார்.

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 13 ஊராட்சி ஒன்றியங்களில் 7இடங்களில் தி.மு.க.வும், 4 இடங்களில் அ.தி.மு.க.வும், சுயேச்சைகள் 2 இடங்களிலும் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளனர்.
Tags:    

Similar News