செய்திகள்
கோப்புப்படம்

கேரளா, மகாராஷ்டிர மாநில கொரோனா அப்டேட்ஸ்

Published On 2021-10-18 15:38 GMT   |   Update On 2021-10-18 15:38 GMT
கேராளவில் இன்று புதிதாக மேலும் 6,676 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மகாராஷ்டிர மாநிலத்தில் 1,485 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கேரளாவில் இன்று புதிதாக 6,676 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 11,023 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ள நிலையில் 60 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை கேரளாவில் 26,925 பேர் உயிரிழந்துள்ளனர். 83,184 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.



மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1485 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 2078 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 27 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை 65,93,182 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 64,21,756 பேர் குணமடைந்துள்ளனர். 1,39,816 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது வரை 28,008 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
Tags:    

Similar News