ஆன்மிகம்
நெல்லையப்பர்-காந்திமதி அம்பாள் ஊஞ்சல் உற்சவம்

ஐப்பசி திருக்கல்யாண விழா: நெல்லையப்பர்-காந்திமதி அம்பாள் ஊஞ்சல் உற்சவம்

Published On 2020-11-13 07:27 GMT   |   Update On 2020-11-13 07:27 GMT
நெல்லைப்பர், காந்திமதியம்பாள் கோவிலில் ஐப்பசி திருக்கல்யாண விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஊஞ்சல் உற்சவம் விமரிசையாக நடைபெற்றது. இன்றும் (வெள்ளிக்கிழமை) ஊஞ்சல் உற்சவம் நடைபெறுகிறது.
தென் தமிழகத்தின் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான நெல்லைப்பர், காந்திமதியம்பாள் கோவிலில் ஐப்பசி திருக்கல்யாண விழா கடந்த 31-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் சுவாமி, அம்பாள் பல்வேறு அலங்காரங்களில் கோவில் பிரகாரத்தில் உலா வந்தனர். விழாவின் முக்கிய நிகழ்வான காந்திமதி அம்பாளுக்கு சுவாமி நெல்லையப்பர் காட்சி கொடுக்கும் வைபவம் கடந்த 2 நாட்களுக்கு முன்பு நடந்தது. அதைத்தொடர்ந்து அம்பாள் சன்னதியில் உள்ள ஆயிரங்கால் மண்டபத்தில் நேற்று முன்தினம் நெல்லையப்பர், காந்திமதி அம்பாள் திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது.

இதைத்தொடர்ந்து அம்பாள் சன்னதியில் உள்ள ஊஞ்சல் மண்டபத்தில் ஊஞ்சல் உற்சவம் தொடங்கியது. நேற்று 2-வது நாளில் ஊஞ்சல் உற்சவம் விமரிசையாக நடைபெற்றது. மாப்பிள்ளை, பெண் நலுங்கு நிகழ்ச்சியும் நடந்தது. இன்றும் (வெள்ளிக்கிழமை) ஊஞ்சல் உற்சவம் நடைபெறுகிறது. நாளை (சனிக்கிழமை) மறுவீடு பட்டண பிரவேச நிகழ்ச்சியுடன் திருவிழா நிறைவு பெறுகிறது,
Tags:    

Similar News