செய்திகள்
அபராதம்

ஆலங்குளத்தில் டாஸ்மாக்கடையில் ரூ.5 கூடுதலாக வசூலித்த விற்பனையாளருக்கு ரூ.5 ஆயிரம் அபராதம்

Published On 2021-04-10 07:00 GMT   |   Update On 2021-04-10 07:00 GMT
மேலும் விற்பனை விலையை விட கூடுதலாக பணம் வசூலித்த விற்பனையாளர் மீது கூடுதல் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மண்டல மேலாளர் தெரிவித்தார்.

ஆலங்குளம்:

தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தை சேர்ந்தவர் விஜயகுமார். இவர் நேற்று முன்தினம் ஆலங்குளம்- தென்காசி சாலையில் உள்ள ஒரு டாஸ்மாக் கடையில் மது வாங்க சென்றுள்ளார்.

அப்போது அங்கிருந்த விற்பனையாளர், விஜயகுமார் வாங்கிய மதுபாட்டிலுக்கு ரூ.5 கூடுதலாக வசூல் செய்துள்ளார்.இதுகுறித்து விஜயகுமார் கேட்டதற்கு விற்பனையாளர் முறையான பதில் கூறவில்லை.

மேலும் இது வழக்கமான நடைமுறைதான் என்றும் அலட்சியமாக பதில் கூறி உள்ளார். இதுகுறித்து விஜயகுமார் நெல்லை மண்டல டாஸ்மாக் மேலாளரிடம் செல்போனில் புகார் தெரிவித்துள்ளார்.

அதன்பேரில் டாஸ்மாக் கடைக்கு மேலாளர் ஷாம் சுந்தர் நேரில் வந்து விசாரணை நடத்தினார். இதில் கடையின் விற்பனையாளர் மதுபாட்டில்களுக்கு ரூ.5 கூடுதலாக வசூல் செய்தது தெரியவந்தது.

இதையடுத்து ஒரு மது பாட்டிலுக்கு ரூ.ஆயிரம் மற்றும் 18 சதவீதம் ஜி.எஸ்.டி. என மொத்தம் ரூ.5,450 அபராதமாக விதிக்கப்பட்டது.

மேலும் விற்பனை விலையை விட கூடுதலாக பணம் வசூலித்த விற்பனையாளர் மீது கூடுதல் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மண்டல மேலாளர் தெரிவித்தார்.

இதுகுறித்து குடிமகன்கள் கூறுகையில், அனைத்து மதுகடைகளிலும் கூடுதல் பணம் வசூல் செய்யப்படுகிறது. இதுதொடர்பாக விற்பனையாளர்களிடம் கேட்டால் அவர்கள் சரியாக பதில் கூறுவதில்லை. மேலும் அரசு அறிவித்தபடி மது பாட்டில்களின் விலை பட்டியல் பல கடைகளில் வைக்கப்படுவதில்லை. எனவே அதிகாரிகள் முறையான ஆய்வை மேற் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Tags:    

Similar News