செய்திகள்
வைரல் புகைப்படம்

இந்திய கூடைபந்து வீரர்கள் என கூறி வைரலாகும் புகைப்படம்

Published On 2021-07-09 05:28 GMT   |   Update On 2021-07-09 05:28 GMT
இருநாடுகளை சேர்ந்த பெண்கள் கூடைபந்து அணி வீரர்கள் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அமெரிக்க பெண்கள் கூடைபந்து அணிக்கு எதிரே மற்றொரு பெண்கள் கூடைபந்து அணியினர் நிற்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இரு அணி வீரர்களின் உயரம் குறித்த பாகுபாடை எடுத்துக் கூறி புகைப்படத்தை நெட்டிசன்கள் பகிர்ந்து வருகின்றனர்.

புகைப்படத்தில் உயரமான வீரர்கள் உடையில் அமெரிக்க நாட்டின் பெயரை குறிக்கும் யு.எஸ்.ஏ. எழுத்துக்கள் மற்றும் கொடி இடம்பெற்று இருக்கிறது. மற்றொரு நாட்டு வீரர்களின் சீருடையில் இருக்கும் பெயர் மறைக்கப்பட்டு இருக்கிறது. எனினும், இவர்களின் சீருடை நீலம் மற்றும் வெள்ளை நிறம் கொண்டுள்ளது. 



வைரல் புகைப்படத்தில் நீலம் மற்றும் வெள்ளை நிற சீருடை அணிந்திருப்பவர்கள் இந்திய பெண்கள் கூடைபந்து யு-16 அணியினர் என சமூக வலைதளங்களில் பலர் தெரிவித்து வருகின்றனர். “USA under 16 years old vs India under 16 years old,” எனும் தலைப்பில் இந்த புகைப்படம் பகிரப்பட்டு வருகிறது.

இதுகுறித்த இணைய தேடல்களில் நீலம் மற்றும் வெள்ளை நிற சீருடையில் இருப்பது எல் சால்வடார் அணி வீரர்கள் என தெரியவந்தது. மேலும் இந்த புகைப்படம் சிலி நாட்டில் 2019 ஆண்டு வாக்கில் எடுக்கப்பட்டது ஆகும். இதனை உறுதிப்படுத்தும் வகையில் பல்வேறு புகைப்படங்கள் இணையத்தில் கிடைக்கின்றன.

போலி செய்திகளை பரப்பாதீர்கள். போலி செய்திகளால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. சமயங்களில் போலி செய்தி பாதிப்பு காரணமாக உயிரிழப்புகளும் ஏற்பட்டு இருக்கின்றன. 
Tags:    

Similar News