ஆன்மிகம்
காவடி பழனியாண்டவர் ஆசிரமம்

காவடி பழனியாண்டவர் ஆசிரமத்தில் பங்குனி உத்திரத்திருவிழா நாளை தொடங்குகிறது

Published On 2021-03-19 08:19 GMT   |   Update On 2021-03-19 08:19 GMT
சேலம் ஜாகீர் அம்மாபாளையத்தில் உள்ள காவடி பழனியாண்டவர் ஆசிரமத்தில் 60-வது ஆண்டு பங்குனி உத்திரத்திருவிழா நாளை (சனிக்கிழமை) தொடங்கி, 30-ந்தேதி வரை நடைபெறுகிறது.
சேலம் ஜாகீர் அம்மாபாளையத்தில் உள்ள காவடி பழனியாண்டவர் ஆசிரமத்தில் 60-வது ஆண்டு பங்குனி உத்திரத்திருவிழா நாளை (சனிக்கிழமை) தொடங்கி, 30-ந் தேதி வரை நடைபெறுகிறது. இதையொட்டி நாளை காலை கொடியேற்றம் நடக்கிறது. தொடர்ந்து தினமும் சிறப்பு பூஜைகள், சிறப்பு வாகனத்தில் சாமி புறப்பாடு போன்றவை நடைபெற உள்ளது. 26-ந் தேதி மதியம் 12 மணிக்கு திருக்கல்யாணம், 27-ந் தேதி சந்தனக்காப்பு அலங்காரம், 28-ந் தேதி காலை கோமாதா பூஜை, சிறப்பு ஹோமம், சுவர்ண முருகன் அலங்காரம், தங்க கவசம் சாத்துப்படி, காவடிகள் புறப்பாடு, அருள்வாக்கு கூறுதல் போன்றவை நடைபெறுகிறது. காலை 11 மணிக்கு கன்னிகாபரமேஸ்வரி அம்மன் திருப்புகழ் சபையின் பஜனை நிகழ்ச்சி, மதியம் 1 மணிக்கு காவடிகள் கோவிலை வந்தடைதல், மகாதீபாராதனை மற்றும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.

மாலை 4 மணிக்கு சிறப்பு சொற்பொழிவு, 5 மணிக்கு பால்குட ஊர்வலம், 5.30 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்தல், இரவு 7.30 மணிக்கு மகா தீபாராதனை போன்ற நிகழ்ச்சிகள் நடக்கிறது. 29-ந் தேதி சத்தாபரணமும், 30-ந் தேதி விடையாற்றி உற்சவமும், திருஊஞ்சல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

இதற்கான ஏற்பாடுகளை ஆசிரம நிர்வாகிகள் சோமசுந்தரம், செல்வி ஆகியோர் செய்து வருகின்றனர்.
Tags:    

Similar News