ஆன்மிகம்
கோவிலூர் முத்துமாரியம்மன் கோவில் தேரோட்டம்

கோவிலூர் முத்துமாரியம்மன் கோவில் தேரோட்டம்

Published On 2021-03-02 09:22 GMT   |   Update On 2021-03-02 09:22 GMT
ஆலங்குடி கோவிலூர் முத்துமாரியம்மன் கோவிலில் மாசி திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நடைபெற்றது. பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழுத்தனர்.
ஆலங்குடி அருகே கோவிலூரில் முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் மாசி திருவிழா நடைபெற்று வருகிறது. விழாவையொட்டி தினமும் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தினமும் இரவு பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

விழாவின் சிகர நிகழ்ச்சியான நேற்று தேரோட்டம் நடைபெற்றது. முன்னதாக சிறப்பு அலங்காரத்தில் அம்மன் தேரில் எழுந்தருளினார். இதைத்தொடர்ந்து பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழுத்தனர். தேர் ரதவீதிகளில் வலம் வந்தது.

அப்போது, பக்தர்கள் அர்ச்சனை செய்து வழிபட்டனர்.. இரவு 10 மணி அளவில் வள்ளி திருமணம் என்னும் வரலாற்று நாடகம் நடைபெற்றது,

Tags:    

Similar News