உள்ளூர் செய்திகள்
சிலுவைப்பாதை பேரணியில் பங்குதந்தைகள் சிலுவையை சுமந்து சென்ற காட்சி.

புனித வெள்ளி சிறப்பு பிரார்த்தனை

Published On 2022-04-15 04:57 GMT   |   Update On 2022-04-15 04:57 GMT
புதுவை தேவாலயங்களில் புனித வெள்ளி சிறப்பு பிரார்த்தனையில் ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர்.
புதுச்சேரி:

இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்படுவதற்கு முன்பு 40 நாட்கள் உபவாசம் இருந்ததாக கிறிஸ்தவர்களின் புனித நூலான பைபிள்  கூறுகிறது.

இதனை ஆண்டுதோறும் தவக்காலமாக கிறிஸ்தவர்கள் கடைபிடித்து வருகின்றனர். கிறிஸ்துவர்களின் தவக்காலம் சாம்பல்  புதனன்று தொடங்கியது. 

புனித வெள்ளி கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி புதுவையில் உள்ள அனைத்து தேவாலயங்களிலும் சிறப்பு பிரார்த்தனைகள் மற்றும் திருப்பலிகள் நடைபெற்றது. 

தூய ஜென்மராக்கினி அன்னை  பேராலயத்தில் பங்குத்தந்தைகள்  தலைமையில் ஏசுபிரானின் மரணத்தை நினைவுபடுத்தும் சிலுவைப்பாதை நிகழ்ச்சி மற்றும் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. 

இதனை தொடர்ந்து தூய ஜென்மராக்கினி அன்னை ஆலயத்தில் இருந்து தொடங்கிய சிலுவைப்பாதை பேரணியில்  பங்குதந்தைகள் சிலுவையை சுமந்து முன்னே செல்ல ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் பின்தொடர்ந்து சென்றனர்.  சிலுவைப்பாதை பேரணி முக்கிய  வீதிகளின் வழியாக சென்று இறுதியில் ஆலயத்தில் நிறைவுபெற்றது. 

இதில்  ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு ஏசுபிரான் பாடலை பாடியபடி ஊர்வலமாக சென்றனர்.  

இதேபோல் புதுவையில் உள்ள தூய இருதய ஆண்டவர் பசிலிக்கா பேராலயம், வில்லியனூர் மாதா ஆலயம், நெல்லித்தோப்பு விண்ணேற்பு அன்னை ஆலயம், அரியாங்குப்பம் ஆரோக்கிய அன்னை ஆலயம், தட்டாஞ்சாவடி பாத்திமா ஆலயம், ஆட்டுப்பட்டு அந்தோணியார் ஆலயம், உழவர்கரை ஜெயராக்கினி அன்னை ஆலயம் உள்ளிட்ட பல்வேறு பேரால-யங்களில் சிலுவைப் பாதை நிகழ்ச்சி நடைபெற்றது.
Tags:    

Similar News