ஆட்டோமொபைல்
ராயல் என்ஃபீல்டு செயலி

வாகன விற்பனைக்கென மொபைல் செயலியை அறிமுகம் செய்த ராயல் என்ஃபீல்டு

Published On 2020-08-21 10:56 GMT   |   Update On 2020-08-21 10:56 GMT
ராயல் என்ஃபீல்டு நிறுவனம் தனது வாகன விற்பனையை ஊக்குவிக்க பிரத்யேக மொபைல் செயலியை வெளியிட்டு உள்ளது.

தமிழ் நாட்டை சேர்ந்த இருசக்கர வாகனங்கள் உற்பத்தியாளரான ராயல் என்ஃபீல்டு தனது வாடிக்கையாளர்களுக்கு புதிய மொபைல் செயலியை வெளியிட்டு இருக்கிறது. ஆண்ட்ராய்டு மற்றும் ஐஒஎஸ் என இருவித இயங்குதளங்களிலும் இந்த செயலி கிடைக்கிறது. 

ராயல் என்ஃபீல்டின் புதிய மொபைல் செயலியை கொண்டு பயனர்கள் புதிய வாகனங்களை முன்பதிவு செய்வது மற்றும் சர்வீஸ் செய்தற்கான நேரத்தை ஒதுக்கிக் கொள்ள முடியும். தங்களது வாகனத்தை சர்வீஸ் செய்ய உகந்த நேரத்தை வாடிக்கையாளர்கள் தேர்வு செய்ய முடியும்.



வாகனத்தை சர்வீஸ் செய்ய கொடுத்தது முதல் சர்வீஸ் நடைபெறும் முறைகள் ஒவ்வொன்றும் செயலியில் அப்டேட் செய்யப்படுகின்றன. இதன் மூலம் வாடிக்கையாளர்கள் மோட்டார்சைக்கிளை பெற்று கொள்ளும் நேரத்தை முன்கூட்டியே திட்டமிட முடியும். இதனால் சர்வீஸ் மையத்தில் கூட்ட நெரிசலை தவிர்க்க முடியும்.

சர்வீஸ் மட்டுமின்றி வாடிக்கையாளர்கள் புதிய ராயல் எஃப்லீடு செயலி கொண்டு அந்நிறுவனம் ஏற்பாடு செய்யும் புதிய ரைடுகள் மற்றும் நிகழ்வுகள் பற்றியும் அறிந்து கொள்ள முடியும். இத்துடன் புதிய மோட்டார்சைக்கிள் வாங்க விரும்புவோரும் செயலியை பயன்படுத்தி முன்பதிவு செய்வது மற்றும் இதர வழிமுறைகளை பின்பற்றலாம்.
Tags:    

Similar News