ஆன்மிகம்
குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் வெளியே நின்று தரிசனம் செய்த பக்தர்கள்

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் வெளியே நின்று தரிசனம் செய்த பக்தர்கள்

Published On 2021-08-21 07:44 GMT   |   Update On 2021-08-21 07:44 GMT
குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலுக்கு தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் உள்ளே செல்ல அனுமதிக்கப்படவில்லை. கோவில் முன்பு நின்றவாறு அம்மனை தரிசனம் செய்துவிட்டு சென்றனர்.
கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு தற்போது அதில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன.

இந்தநிலையில் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய 3 நாட்கள் பக்தர்கள் வழிபாட்டு தலங்களில் தரிசனம் செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலுக்கு நேற்று சாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் உள்ளே செல்ல அனுமதிக்கப்படவில்லை.

கோவில் முன்பு நின்றவாறு அம்மனை தரிசனம் செய்துவிட்டு சென்றனர். நேற்று முகூர்த்த நாள் என்பதால் கோவிலுக்கு வந்த மணமக்கள் வெளியே நின்று மாலை மாற்றி திருமணம் செய்து கொண்டனர். பின்னர் சாமி தரிசனம் செய்து விட்டு அங்கிருந்து சென்றனர்.

Tags:    

Similar News