செய்திகள்
ஸ்ரீநகரில் இருந்து புறப்பட்ட தொழிலாளர்கள்

தொடரும் படுகொலைகள்- காஷ்மீரை விட்டு வெளியேறும் புலம்பெயர் தொழிலாளர்கள்

Published On 2021-10-18 07:00 GMT   |   Update On 2021-10-18 09:41 GMT
ஜம்மு காஷ்மீரில் நேற்று பீகாரை சேர்ந்த அரவிந்த் குமார், உத்தர பிரதேசத்தை சேர்ந்த சாகிர் அகமது ஆகியோரை பயங்கரவாதிகள் சுட்டுக் கொன்றனர்.
ஸ்ரீநகர்:

ஜம்மு காஷ்மீரில் பொதுமக்கள் மீதான பயங்கரவாதிகளின் தாக்குதலை தடுப்பதற்காக பாதுகாப்பு படையினர் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். எனினும் பயங்கரவாதிகளின் அட்டூழியம் தொடர்ந்து வருகிறது. குறிப்பாக காஷ்மீர் அல்லாத பிற மாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்களை குறிவைத்து பயங்கரவாதிகள் தாக்குகின்றனர். நேற்று பீகாரை சேர்ந்த அரவிந்த் குமார், உத்தர பிரதேசத்தை சேர்ந்த சாகிர் அகமது ஆகியோரை பயங்கரவாதிகள் சுட்டுக் கொன்றனர். 

இந்த தாக்குதல்களைத் தொடர்ந்து, வெளிமாநிலங்களைச் சேர்ந்தவர்கள் காஷ்மீரில் இருந்து வெளியேறியவண்ணம் உள்ளனர். இன்றும் தொழிலாளர்கள் சிலர் ஸ்ரீநகரில் இருந்து சொந்த ஊருக்கு புறப்படடுச் சென்றனர். 

சொந்த ஊருக்கு புறப்பட்ட ராஜஸ்தானைச் சேர்ந்த தொழிலாளி ஒருவர் கூறுகையில், ‘இங்கு நிலைமை மோசமாகி வருகிறது. எங்களுக்கு பயமாக இருக்கிறது. எங்களுடன் குழந்தைகள் உள்ளனர், எனவே எங்கள் ஊருக்குத் திரும்புகிறோம்’ என்றார்.
Tags:    

Similar News