செய்திகள்
புதுவை அரசு

புதுவை அரசு ஊழியர்களுக்கு போனஸ் அறிவிப்பு

Published On 2021-10-23 11:05 GMT   |   Update On 2021-10-23 11:05 GMT
கடந்த ஒரு மாதமாக அரசு ஊழியர்களுக்கான போனஸ் நடவடிக்கைகளில் நிதித்துறை மும்முரமாக ஈடுபட்டு வந்தது. அனைத்து பணிகளும் முடிந்து போனஸ் தொடர்பாக தனது முடிவினை நிதித்துறை அறிவித்துள்ளது.
புதுச்சேரி:

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு புதுவை மாநில அரசு துறைகளில் பணிபுரியும் பி பிரிவு மற்றும் சி பிரிவு ஊழியர்களுக்கு 2020-21-ம் ஆண்டுக்கான போனஸ் வழங்க நடவடிக்கை எடுக்க நிதித்துறைக்கு முதல்-அமைச்சர் ரங்கசாமி உத்தரவிட்டார்.

கடந்த ஒரு மாதமாக அரசு ஊழியர்களுக்கான போனஸ் நடவடிக்கைகளில் நிதித்துறை மும்முரமாக ஈடுபட்டு வந்தது. அனைத்து பணிகளும் முடிந்து போனஸ் தொடர்பாக தனது முடிவினை நிதித்துறை அறிவித்துள்ளது.

அரசிதழ் பதிவு பெறாத பி பிரிவு மற்றும் சி பிரிவு ஊழியர்களுக்கு போனசாக ரூ.6,908 மற்றும் முழுநேர தற்காலிக ஊழியர்களுக்கு ரூ.ஆயிரத்து 200 வழங்கப்பட உள்ளது.

3 ஆண்டுக்கு மேல் பணிபுரியும் தினக்கூலி ஊழியர்களுக்கு போனஸ் தொகை அதிகபட்சமாக ரூ.ஆயிரத்து 184 வழங்கப்படும். இதனால் அரசு ஊழியர்கள் மற்றும் முழுநேர தற்காலிக ஊழியர்கள் 15 ஆயிரம் பேர் பயனடைவர்.
Tags:    

Similar News