உள்ளூர் செய்திகள்
சுவரொட்டி

மனசு ரொம்ப வலிக்குது - கோவையில் அஜித் ரசிகர்கள் ஒட்டிய பரபரப்பு சுவரொட்டி

Published On 2022-01-11 10:28 GMT   |   Update On 2022-01-11 10:28 GMT
வலிமை பட ரிலீஸ் தள்ளிப்போனதால் கோவை அஜித் ரசிகர்கள் நூதன முறையில் சுவரொட்டி ஒட்டியுள்ளனர்
கோவை:

நடிகர் அஜித் நடிப்பில் வலிமை திரைப்படம் தயாராகி உள்ளது. கொரோனா பரவலால் இந்த படத்தின் படப்பிடிப்பு நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்தது. இதனால், வலிமை ‘அப்டேட்’ வேண்டும் என்று அஜித் ரசிகர்கள் இணையத்தில் ‘டிரெண்ட்’ செய்து வந்தனர். 

வலிமை அப்டேட் என்ற வார்த்தையை வைத்து அரசியல் தலைவர்களும் தங்களை முன்னிறுத்திக் கொள்ளும் அளவுக்கு இந்த வார்த்தை பிரபலமானது. கிரிக்கெட் மைதானங்களிலும் ரசிகர் கள் வலிமை அப்டேட் கேட்ட வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது.

 தொடர்ந்து படப்பிடிப்பு முடிவடைந்து படம் பொங்கலுக்கு ரிலீஸ் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் தமிழகத்தில் தற்போது கொரோனா தாக்கம் அதிகரித்துள்ளதால் திரையரங்குகளில் 50 சதவீத  ரசிகர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 

இதனால் வலிமை ரிலீஸ் தேதி ஒத்தி வைக்கப்படுவதாக பட தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.  இதனால் நீண்ட நாட்களாக படத்திற்காக காத்திருந்த அஜித் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர். 

இவ்வாறு ஏமாற்றம் அடைந்த கோவையைச் சேர்ந்த ரசிகர்கள் நூதன முறையில் சுவரொட்டி அச்சடித்து நகரின் பல இடங்களில் ஒட்டியுள்ளனர்.  அந்த சுவரொட்டியில்   ஏமாற்றம், ஏமாற்றம், ஏமாற்றம், மனசு ரொம்ப வலி(மை) க்குது  என்று அச்சிட்டு தங்களது கவலையையும், ஆதங்கத்தையும் தெரிவித்துள்ளனர்.
Tags:    

Similar News