ஆன்மிகம்
முருகன்

வவ்வால் குகை பாலமுருகன் கோவிலில் கந்தசஷ்டி விழா 28-ந்தேதி தொடங்குகிறது

Published On 2019-10-22 04:56 GMT   |   Update On 2019-10-22 04:56 GMT
ஆரல்வாய்மொழி வவ்வால் குகை பாலமுருகன் கோவிலில் கந்தசஷ்டி விழா 28-ந்தேதி தொடங்கி 7 நாட்கள் நடக்கிறது.
ஆரல்வாய்மொழி வவ்வால் குகை பாலமுருகன் கோவிலில் கந்தசஷ்டி விழா 28-ந் தேதி தொடங்கி 7 நாட்கள் நடக்கிறது.

விழாவில் முதல் நாள் அதிகாலை கணபதி ேஹாமம், காலை 10 மணிக்கு அபிஷேகம், காப்பு கட்டுதல், அன்னதானம் நடக்கிறது. விழா நாட்களில் தினமும் அபிஷேகம், சிறப்பு பூஜை நடைபெறுகிறது.

விழாவில் 2-ந் தேதி மாலை 4 மணிக்கு வவ்வால் குகை பாலமுருகன் சூரசம்ஹாரத்துக்கு எழுந்தருளுதல், மாலை 6.30 மணிக்கு சூரசம்ஹாரம், வாணவேடிக்கை, இரவு சிறப்பு அபிஷேகம், பாலமுருகன் மயில் வாகனத்தில் பவனி வருதல், 3-ந் தேதி காலை 10 மணிக்கு தீபாராதனை, திருக்கல்யாணம் நிகழ்ச்சி, அன்னதானம் நடைபெறுகிறது.விழாவுக்கான ஏற்பாடுகளை ஆரல்வாய்மொழி பெருமாள்புரம் இந்து நாடார் சமுதாய அறக்கட்டளை தலைவர் சண்முக பெருமாள் மற்றும் நிர்வாகிகள், ஊர் பொதுமக்கள் செய்து வருகிறார்கள்.
Tags:    

Similar News