செய்திகள்
மெக்ஸிகோ அதிபர் ஆண்ட்ரஸ் மானுவல் லோபஸ் ஒப்ராடோர்

இந்தியாவிடம் இருந்து கொரோனா தடுப்பூசிகளை பெறுவோம் - மெக்சிகோ அதிபர்

Published On 2021-01-31 08:33 GMT   |   Update On 2021-01-31 08:33 GMT
இந்தியாவிடமிருந்து கொரோனா தடுப்பூசி மருந்துகளை பெறுவோம் என மெக்ஸிகோ அரசு தெரிவித்துள்ளது.
மெக்சிகோ:

பிப்ரவரி மாதம் இந்தியாவில் இருந்து சுமார் 8 லட்சத்து 70 ஆயிரம் டோஸ் கொரோனா தடுப்பூசியை இறக்குமதி செய்யவும், தடுப்பூசி மருந்துகளை உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் மெக்ஸிகோ அதிபர் ஆண்ட்ரஸ் மானுவல் லோபஸ் ஒப்ராடோர் தெரிவித்தூள்ளார்.

இதற்காக மெக்ஸிகோ அஸ்ட்ரா ஜெனெகாவுடம் ஒப்பந்தம் போட்டுள்ளன. அதே சமயம் பிப்ரவரி 10ம் தேதி முதல் மெக்ஸிகோவில் ஃபைசர் நிறுவனத்தின் தடுப்பூசி விநியோகம் மீண்டும் தொடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News