செய்திகள்
எல்லைப் பாதுகாப்பு படையினர்

பஞ்சாப் எல்லையில் ஊடுருவிய பாகிஸ்தானியர் சுட்டுக்கொலை- பிஎஸ்எப் அதிரடி

Published On 2021-01-15 10:21 GMT   |   Update On 2021-01-15 10:21 GMT
பஞ்சாப் எல்லைக்குள் ஊடுருவிய பாகிஸ்தானியரை எல்லைப் பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றனர்.
குர்தாஸ்பூர்:

பஞ்சாப் மாநிலம், குர்தாஸ்பூர் பகுதியில் உள்ள இந்திய-பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் நேற்று இரவு எல்லை பாதுகாப்புப் படை (பிஎஸ்எப்) வீரர்கள் வழக்கமான ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, பாகிஸ்தான் பகுதியில் இருந்து சர்வதேச எல்லையை தாண்டி, இந்திய எல்லைக்குள் ஒருவர் ஊடுருவியிருப்பதை வீரர்கள் கண்டுபிடித்தனர்.

அவரது நடமாட்டம் சந்தேகத்தை ஏற்படுத்தவே, உடனடியாக அந்த நபரை நோக்கி எல்லைப் பாதுகாப்பு படையினர் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் அந்த நபர் உயிரிழந்தார். இந்த தகவலை எல்லைப் பாதுகாப்பு படை தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. கொல்லப்பட்ட நபரிடம் எந்த அடையாள அட்டையும் இல்லாததால் அவர் யார் என்பது தெரியவில்லை. விசாரணை நடைபெறுகிறது.

இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியான காஷ்மீரை தங்களுடையது என்று சொந்தம் கொண்டாடி வரும் பாகிஸ்தான், தொடர்ந்து எல்லையில் அத்துமீறிய தாக்குதல் நடத்துகிறது. அத்துடன், தீவிரவாதிகளை ஊடுருவ செய்து இந்தியாவிற்குள் அமைதியை சீர்குலைக்கும் செயல்களிலும் ஈடுபடுகிறது. இதனால் இந்திய வீரர்கள் எல்லைப்பகுதிகளை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
Tags:    

Similar News