ஆன்மிகம்
பழனிக்கு பாதயாத்திரை சென்ற தைப்பூச காவடிகள் குழு எடப்பாடி திரும்பியது

பழனிக்கு பாதயாத்திரை சென்ற தைப்பூச காவடிகள் குழு எடப்பாடி திரும்பியது

Published On 2021-02-10 04:28 GMT   |   Update On 2021-02-10 04:28 GMT
எடப்பாடியில் இருந்து தைப்பூச காவடிகள் கட்டப்பட்டு, பல குழுக்களாக பழனிக்கு பாதயாத்திரையாக சென்ற பக்தர்கள் இன்று (புதன்கிழமை) எடப்பாடி திரும்புகின்றனர்.
எடப்பாடியில் இருந்து தைப்பூச காவடிகள் கட்டப்பட்டு, பல குழுக்களாக பழனிக்கு பாதயாத்திரையாக சென்று பழனி முருகனை தரிசித்துவிட்டு மீண்டும் எடப்பாடிக்கு பாதயாத்திரையாக வருவது வழக்கம்.

இதேபோல் இந்த ஆண்டும் கடந்த ஜனவரி மாதம் 25-ந்தேதி வெள்ளாண்டிவலசு வன்னிய குல சத்திரிய ஆதிபரம்பரை காவடிகள் மற்றும் பருவதராஜகுல மகாஜனங்களின் காவடிகள் கட்டப்பட்டு பாதயாத்திரையாக பழனிக்கு சென்றனர்.

வன்னிய குல சத்திரிய ஆதிபரம்பரை காவடிகள் கடந்த 2-ந் தேதி பழனிமலை ஏறி சாமி தரிசனம் செய்தனர். பின்னர் பாதயாத்திரையாக நேற்று எடப்பாடிக்கு திரும்பினர்.

பருவதராஜகுல மகாஜனங்களின் காவடிகள் கடந்த 3-ந் தேதி பழனி மலைக்கு பாதயாத்திரையாக சென்று பழனி முருகனை தரிசனம் செய்து அன்று இரவு மலையில் தங்கினர். பின்னர் பாதயாத்திரையாக இன்று (புதன்கிழமை) எடப்பாடி திரும்புகின்றனர்.
Tags:    

Similar News