ஆன்மிகம்
நரகாசுர வதம்

நரகாசுர வதம்

Published On 2020-11-13 08:28 GMT   |   Update On 2020-11-13 08:28 GMT
இந்துக்களின் பண்டிகைகள் பல இருந்தாலும் அவற்றுள் தீபாவளி சிறப்பிடத்தை பிடிக்கிறது. திருக்கார்த்திகைக்கு அடுத்தபடியாக தீபங்கள் முக்கிய இடத்தை பிடிப்பது, இந்த தீபாவளி திருநாளில்தான்.
மனிதர்களுக்கு உதவ பல எந்திரங்கள் வந்து விட்டாலும் கூட, பல மனிதர்களின் வாழ்வும் எந்திர மயமாகவே அமைந்திருப்பது துரதிர்ஷ்டவசமானது. தூக்கம் கலைந்ததும் அன்றாட பணிகள், அது நிறைவடைந்ததும் மீண்டும் தூக்கம் என தொடரும் இந்த மனித வாழ்வியல் பயணம், அலுப்பு மிகுந்தது. ஆனால் அந்த அலுப்பு, வாழ்க்கையில் சலிப்பை ஏற்படுத்தி விடக்கூடாது.

இதற்காக உருவாக்கப்பட்டதே திருவிழாக்களும், பண்டிகைகளும். அனைவரும் அன்றாட பணியில் இருந்து விடுபட்டு, குடும்பம், உறவுகள் மற்றும் சுற்றத்தாருடன் மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ளும் விதமாகவே திரு விழாக்களும், பண்டிகைகளும் இருந்து வருகின்றன. பண்டிகை என்பது வெறும் மகிழ்ச்சிக்குரியதாக மட்டுமே இருந்துவிடாமல், அதன் வாயிலாக ஆன்மிகத்தையும், பக்தியையும், இறைவனையும் உணரும் வகையிலேயே பண்டிகைகள் தோன்றிஉள்ளன.

இந்துக்களின் பண்டிகைகள் பல இருந்தாலும் அவற்றுள் தீபாவளி சிறப்பிடத்தை பிடிக்கிறது. திருக்கார்த்திகைக்கு அடுத்தபடியாக தீபங்கள் முக்கிய இடத்தை பிடிப்பது, இந்த தீபாவளி திருநாளில்தான்.

நரகாசுர வதம்

நரகாசுரன் என்ற அசுரனை, கண்ணனும் அவரது மனைவியில் ஒருவரான சத்தியபாமாவும் (நரகாசுரனின் தாய் பூமாதேவியின் அம்சமே சத்தியபாமா) சேர்ந்து சம்ஹாரம் செய்த நாளே தீபாவளி என்று பக்தி மார்க்கமான கதை தெரிவிக்கிறது. இந்த தினத்தில் காலையில் எழுந்து எண்ணெய் தேய்த்து கங்கா ஸ்நானம் செய்து தீபங்கள் ஏற்றி வழிபடுவது சிறப்பு தரும். தீபாவளி தினத்தில் தண்ணீரில் கங்கா தேவி வாசம் செய்வதாக ஐதீகம் உள்ளது.

தீபாவளி கொண்டாட்டத்துக்கு பக்தி மார்க்கமாக கூறப்பட்டுள்ள கதையில் புதைந்திருக்கும் வாழ்க்கை தத்துவத்தை அனைவரும் உணர வேண்டும். 10 அவதாரங்கள் எடுத்து, பல பல பராக்கிரமங்கள் புரிந்த கிருஷ்ணரால், நரகாசுரன் என்ற அசுரனை தனியாக போரிட்டு வெல்ல முடியாதா என்ன? எதற்காக அவருக்கு சத்தியபாமா என்ற பெண்ணின் உதவி தேவைப்படுவதாக பக்தி கதை கூறுகிறது.
Tags:    

Similar News