செய்திகள்
தினேஷ் திரிவேதி

தினேஷ் திரிவேதி ராஜினாமா- காலியான மாநிலங்களவை எம்.பி. பதவிக்கு இடைத்தேர்தல்

Published On 2021-07-16 12:27 GMT   |   Update On 2021-07-16 12:27 GMT
இடைத்தேர்தலின்போது கொரோனா தடுப்பு நெறிமுறைகள் பின்பற்றப்பட வேண்டும் என்று தேர்தல் ஆணையம் கூறி உள்ளது.
புதுடெல்லி:

மேற்கு வங்காளத்தில் இருந்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சி சார்பில் மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட தினேஷ் திரிவேதி கடந்த பிப்ரவரி 12ம் தேதி பதவியை ராஜினாமா செய்தார். அவரது எம்.பி. பதவிக்காலம் 2026ம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரை இருந்த நிலையில், மேற்கு வங்காளத்தில் நடக்கும் வன்முறைகளை கட்டுப்படுத்த இயலாததால் ராஜினாமா செய்வதாக கூறினார். அதன்பின்னர் திரிணாமுல் காங்கிரசில் இருந்து விலகி பா.ஜ.க.வில் இணைந்தார்.

இந்நிலையில், தினேஷ் திரிவேதி ராஜினாமா செய்ததால் காலியாக உள்ள மாநிலங்களவை எம்.பி. பதவிக்கு ஆகஸ்ட் 9ம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் இன்று அறிவித்துள்ளது. இதற்கான அறிவிப்பாணை வரும் 22ம் தேதி வெளியிடப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

இடைத்தேர்தலின் போது கொரோனா தடுப்பு நெறிமுறைகள் பின்பற்றப்பட வேண்டும் என்றும் தேர்தல் ஆணையம் கூறி உள்ளது.

கொரோனா பரவலைக் கருத்தில் கொண்டு சில பாராளுமன்ற, சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலை தேர்தல் ஆணையம் ஒத்திவைப்பதாக மே மாதம் அறிவித்தது. இதேபோல், ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் காலியாக உள்ள 9 சட்டமேலவை உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தலையும் தள்ளி வைத்தது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News