ஆட்டோமொபைல்
நிசான் மேக்னைட்

உற்பத்தியில் புது மைல்கல் எட்டிய நிசான் மேக்னைட்

Published On 2021-04-05 06:51 GMT   |   Update On 2021-04-05 06:51 GMT
நிசான் நிறுவனத்தின் காம்பேக்ட் எஸ்யுவி மாடலான மேக்னைட் இந்திய உற்பத்தியில் புது மைல்கல் எட்டியுள்ளது.

நிசான் நிறுவனம் தனது மேக்னைட் மாடல் உற்பத்தியில் 10 ஆயிரம் யூனிட்களை கடந்துள்ளதாக அறிவித்து இருக்கிறது. இந்திய சந்தையில் அறிமுகமான ஆறு மாதங்களில் இந்த மைல்கல் எட்டப்பட்டு இருக்கிறது.

தொடர்ச்சியான வரவேற்பு காரணமாக தமிழ் நாட்டில் செயல்பட்டு வரும் ஆலையில் உற்பத்தி எண்ணிக்கையை வெகுவாக அதிகரித்து இருக்கிறது. ஆயிரத்திற்கும் அதிக ஊழியர்கள் கொண்ட ஆலையில் உற்பத்தி பணிகளை மேற்கொள்ள நிசான் மூன்றாவது ஷிப்ட் துவங்கி உள்ளது.



இதன் மூலம் புதிய கார் வினியோகம் செய்வதற்கு ஆகும் காலக்கட்டத்தை குறைக்க நிசான் திட்டமிட்டு உள்ளது. இந்திய சந்தையில் நிசான் மேக்னைட் மாடல் கடந்த ஆண்டு டிசம்பர் 2 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட்டது. இதன் துவக்க விலை ரூ. 4.99 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டது. எனினும், தற்போது இதன் விலை அதிகரிக்கப்பட்டு விட்டது.
Tags:    

Similar News