ஆட்டோமொபைல்

மணிக்கு 160 கிமீ வேகத்தில் சீறி பாய்ந்து ரூ.1.8 லட்சம் அபராதம் செலுத்திய கார் ஓட்டுனர்

Published On 2018-03-24 09:43 GMT   |   Update On 2018-03-24 09:43 GMT
ஐதராபாத் நகர சாலையில் மணிக்கு சுமார் 160 கிலோமீட்டர் வேகத்தில் சீறி பாய்ந்த கார் ஓட்டுனருக்கு அம்மாநில போக்குவரத்து காவல் துறை சார்பில் ரூ.1.8 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
ஐதராபாத்:

ஐதராபாத் நகரில் ஹோன்டா ஜாஸ் காருக்கு ரூ.1.8 லட்சம் அபராதம் விதிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டீம்-பிஹெச்பி வெளியிட்டிருக்கும் தகவல்களின் படி நகர சாலையில் அதிவேகமாக சென்றதே இத்தகைய அபராதத்திற்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகப்படியான விபத்துக்கள் ஏற்பட்டதை தொடர்ந்து ஐதராபாத் நகரின் எட்டு வழி சாலையில் வாகனங்களின் வேகம் மணிக்கு 120 கிலோமீட்டரில் இருந்து 100 கிலோமீட்டராக குறைக்கப்பட்டது. தெலுங்கானா மாநில இ-செல்லான் மையத்தில் அபராதம் விதிக்கப்பட்டு இருக்கும் ஹோன்டா ஜாஸ் மணிக்கு 163 கிலோமீட்டர் வேகத்தில் சென்றது கண்டறியப்பட்டுள்ளது. 

ஏப்ரல் 4, 2017-இல் இருந்து மார்ச் 10, 2018 வரை மட்டும் சுமார் 127 முறை அபராதம் விதிக்கப்பட்டு இருக்கிறது. ஒவ்வொரு குற்றத்திற்கும் ரூ.1,435 மற்றும் பயனர் கட்டணம் ரூ.35 என அபராதம் விதிக்கப்பட்டது. அந்த வகையில் ஹோன்டா ஜாஸ் இதுவரை மட்டும் ரூ.1,82,245 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் நெடுஞ்சாலை மற்றும் எக்ஸ்பிரஸ் சாலைகளின் அதிவேக உச்ச வரம்பை மணிக்கு 100 கிலோமீட்டர் மற்றும் 120 கிலோமீட்டராக அதிகரித்தது.
Tags:    

Similar News