செய்திகள்
மராட்டிய முதல் மந்திரி தேவேந்திர பட்னாவிசு

மராட்டிய முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிசுக்கு ரூ.4¼ கோடி சொத்து

Published On 2019-10-05 20:20 GMT   |   Update On 2019-10-05 20:20 GMT
மராட்டிய முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிசுவின் சொத்து மதிப்பு ரூ.4¼ கோடி என தன வேட்பு மனுவில் தெரிவித்துள்ளார்.
நாக்பூர்:

மராட்டியத்தில் வருகிற 21- ந்தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் ஆளும் பா.ஜனதாவை சேர்ந்த மாநில முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் நாக்பூர் தென்மேற்கு தொகுதியில் போட்டியிடுகிறார். அவர் கடைசி நாளான நேற்றுமுன்தினம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

முதல்-மந்திரி பட்னாவிஸ் வேட்பு மனுவில் தனது சொத்து மதிப்பு ரூ.4 கோடியே 24 லட்சம் என தெரிவித்து உள்ளார்.

இவற்றில் அசையும் சொத்தின் மதிப்பு ரூ.45 லட்சத்து 94 ஆயிரத்து 634 ஆகும். அசையா சொத்தின் மதிப்பு ரூ.3 கோடியே 78 லட்சத்து 29 ஆயிரம் ஆகும். கடந்த 2014-ம் ஆண்டு தேர்தலின்போது அவரது அசையா சொத்து மதிப்பு ரூ.1 கோடியே 81 லட்சமாக இருந்தது.

கடந்த தேர்தலின் போது தனது கையிருப்பு ரூ.50 ஆயிரம் என தெரிவித்து இருந்த பட்னாவிஸ் தற்போது தன்னிடம் ரூ.17 ஆயிரத்து 500 கையிருப்பு உள்ளதாக வேட்பு மனுவில் தெரிவித்து உள்ளார்.

பட்னாவிசின் வங்கி இருப்பு ரூ.1.19 லட்சத்தில் இருந்து ரூ.8.29 லட்சமாக ஆக உயர்ந்துள்ளது.

தனது மனைவி அம்ருதா பட்னாவிசின் அசையும் சொத்து மதிப்பு ரூ.3 கோடியே 39 லட்சத்து 58 ஆயிரத்து 741 என்றும், அசையா சொத்தின் மதிப்பு ரூ.99 லட்சத்து 39 ஆயிரம் எனவும் தெரிவித்து உள்ளார்.

அம்ருதாவின் வங்கி இருப்பு ரூ. 3 லட்சத்து 37 ஆயிரமாகவும், கையிருப்பு ரூ.12 ஆயிரத்து 500 என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. முதல் மந்திரி பட்னாவிஸ் தனக்கு எதிராக வக்கீல் சதிஷ் உகே, மோனிஸ் ஜபல்புரே ஆகியோர் தொடர்ந்த 4 வழக்குகள் உள்ளதாகவும் வேட்பு மனுவில் தெரிவித்து உள்ளார்.
Tags:    

Similar News