செய்திகள்
கைது

இரணியல் அருகே கோழி கழிவுகளை லாரியில் ஏற்றி வந்த 2 பேர் கைது

Published On 2019-11-06 15:05 GMT   |   Update On 2019-11-06 15:05 GMT
இரணியல் அருகே போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கோழி கழிவுகளை லாரியில் ஏற்றி வந்த 2 பேரை கைது செய்தனர்.
இரணியல்:

குமரி மாவட்டம் வழியாக தமிழகத்திற்குள் கோழி கழிவுகள் மற்றும் ஓட்டல் கழிவுகளை ஏற்றி வந்து கொட்டப்படுவதாக புகார்கள் வந்தது. இதையடுத்து சோதனைச் சாவடிகளில் வாகனங்களை தீவிர சோதனைக்குபின் அனுமதிக்கவும், போலீசார் ரோந்துப்பணியை தீவிரப்படுத்தவும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத் அறிவுறுத்தி இருந்தார். அதன்படி இரணியல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சார்லஸ் மற்றும் போலீசார் நேற்று திங்கள்நகர் ரவுண்டானா பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

அப்போது அந்த வழியாக டெம்போ ஒன்று வேகமாக வந்தது. மேலும் அதில் இருந்து துர்நாற்றம் வீசியது. இதில் சந்தேகம் அடைந்த போலீசார் அந்த டெம்போவை தடுத்து நிறுத்தி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அதில் பாதுகாப்பற்ற முறையில் ஓட்டல் கழிவு மற்றும் கோழிக்கழிவுகளை ஏற்றி வந்தது தெரியவந்தது. 

இதையடுத்து டெம்போவில் வந்தவர்களை போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர். அதில் அவர்கள் அழகப்பபுரம் பகுதியை சேர்ந்த பாக்கிய ராஜ் (வயது 34), சார்லின் (48) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர்களை கைது செய்தனர்.
Tags:    

Similar News