செய்திகள்
இணையதளம்

வேட்பாளர்கள்-கட்சி நிர்வாகிகள் 4,255 பேரின் சமூக வலைதள கணக்குகள் கண்காணிப்பு

Published On 2021-04-04 09:33 GMT   |   Update On 2021-04-04 09:33 GMT
சமூக வலைதளங்களான பேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்டாகிராம் உள்ளிட்டவகைளில் வேட்பாளர்கள் மற்றும் அரசியல் கட்சி நிர்வாகிகள் செய்யும் பிரசாரங்கள், பிற செய்திகள் உள்ளிட்டவைகளை கண்காணித்து நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

நெல்லை:

சட்டமன்ற தேர்தலையொட்டி நெல்லையில் தேர்தல் விதிமுறை மீறல்கள் குறித்து கண்காணிக்க மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளது.

தேர்தல் விதியை மீறி சமூக வலைதளங்களில் பிரசாரம் செய்யப்படுவதை கண்காணிக்க நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தனி அறை அமைக்கப்பட்டு கண்காணிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.

அதில் சமூக வலைதளங்களான பேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்டாகிராம் உள்ளிட்டவகைளில் வேட்பாளர்கள் மற்றும் அரசியல் கட்சி நிர்வாகிகள் செய்யும் பிரசாரங்கள், பிற செய்திகள் உள்ளிட்டவைகளை கண்காணித்து நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

நெல்லை மாவட்டத்தில் வேட்பாளர்கள் மற்றும் நெல்லை மாவட்ட கட்சி நிர்வாகிகள் 4, 255 பேரின் சமூக வலைதள கணக்குகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. இதனை மாவட்ட கலெக்டரும், தேர்தல் அலுவலருமான விஷ்ணு, பொதுபார்வையாளர்களுக்கு விளக்கினார்.

முன்னதாக 218 நுண் பார்வையாளர்களுக்கான பயிற்சி வகுப்புகள் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. இந்த பயிற்சியில் பொது பார்வையாளர்கள் பல்வேறு அறிவுரைகளை வழங்கி, தேர்தல் அன்று செய்யவேண்டிய மற்றும் செய்யக்கூடாத செயல்பாடுகள் குறித்து கலெக்டர் அறிவுரை வழங்கினார்.

இதில் மாவட்ட வருவாய் அலுவலர் பெருமாள், தேசிய தகவல் மைய மேலாளர் தேவராஜன், ஆறுமுகநயினார், உதவி மக்கள் தொடர்பு அலுவலர் மகாகிருஷ்ணன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News