செய்திகள்
கோப்புபடம்

அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் மாணவர் சேர்க்கை

Published On 2021-07-16 11:13 GMT   |   Update On 2021-07-16 11:13 GMT
8 மற்றும் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகள் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.
திருப்பூர்:

அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து திருப்பூர் தாராபுரம் ரோடு அரசு தொழிற்பயிற்சி நிறுவன (ஐ.டி.ஐ.,) முதல்வர் அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், பிட்டர், எலக்ட்ரீசியன், எலக்ட்ரானிக், மெக்கானிக், டை மேக்கர், டிராப்ட்ஸ்மேன் சிவில், வயர்மென், கம்ப்யூட்டர் எம்பிராய்டரி, தையல் தொழில்நுட்பம், கம்ப்யூட்டர் ஆபரேட்டர் உள்ளிட்ட தொழில் பிரிவுகளில் சேர அட்மிஷன் நடக்கிறது.

8 மற்றும் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகள் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். தொழில்படிப்பில் இணையும் மாணவருக்கு அரசின் இலவச லேப்டாப், சைக்கிள், யூனிபார்ம், பாடப்புத்தகம், காலணி, பஸ்-பாஸ், 750 ரூபாய் மாதாந்திர உதவி தொகை வழங்கப்படும்.

மேலும் விபரங்களுக்கு 95002 33407 என்ற எண்ணில் அழைக்கலாம். வரும் 28-ந் தேதி வரையிலான விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News