உள்ளூர் செய்திகள்
கலெக்டர் காயத்ரிகிருஷ்ணன்

திருவாரூர் செய்திகள், சிறுபான்மையின மாணவர்களின் கல்வி உதவித்தொகை பெற காலக்கெடு நீட்டிப்பு

Published On 2022-01-13 10:09 GMT   |   Update On 2022-01-13 10:09 GMT
சிறுபான்மையின மாணவர் கல்வி உதவித்தொகை பெற காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது என திருவாரூர் மாவட்ட கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
திருவாரூர்:

திருவாரூர் மாவட்ட கலெக்டர் காயத்ரிகிருஷ்ணன் செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது,

தமிழ்நாட்டில் அரசு, அரசு உதவிபெறும் மற்றும் 
அங்கீகரிக்கப்பட்ட தனியார் கல்வி நிலையங்களில் 11-ம் வகுப்பு முதல் பி.எச்.டி. படிப்புவரை பயிலும் இஸ்லாமிய, கிறித்துவ, 
சீக்கியம், புத்த, பார்சி மற்றும் ஜெயின் மதங்களைச் சார்ந்த மாணவ, மாணவிகளிமிருந்து 2021-22 ம் ஆண்டிற்கு 

மத்திய அரசின் பள்ளி மேற்படிப்பு மற்றும் தகுதி மற்றும் வருவாய் 
அடிப்படையிலான கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் உதவித் தொகை பெறுவதற்கான விண்ணப்பங்கள் இணையதளம் மூலம் விண்ணப்பிக்க 15.1.22 வரை காலநீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

தகுதிவாய்ந்த சிறுபான்மையின மாணவ, மாணவிகள் மேற்படி காலக்கெடுவிற்குள் விண்ணப்பித்து பயனடைய வேண்டும். 

மேலும், அனைத்து கல்வி நிலையங்களும் சிறுபான்மையினர் கல்வி உதவித்தொகை கோரி மாணவ மாணவிகளிடமிருந்து வரப்பெற்ற விண்ணப்பங்களை குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் தேசிய கல்வி உதவித்தொகை இணையத்தில் சரிபார்கக வேண்டும்.

தகுதியுள்ள சிறுபான்மையின மாணவ-மாணவிகளின் விண்ணப்பத்தினை சரிபார்ப்பதில் சுணக்கம் காட்டும் கல்வி நிலையங்களின் மீது அரசால் தக்கநடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அறிவுறுத்தப்படுகிறது. 

கூடுதல் விவரங்களுக்கு சம்மந்தப்பட்ட மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர்களை அணுகலாம் என தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News