தொழில்நுட்பம்
ரியல்மி ஸ்மார்ட் டிவி

ரூ. 12 ஆயிரம் பட்ஜெட்டில் ரியல்மி ஆண்ட்ராய்டு டிவி அறிமுகம்

Published On 2020-05-26 06:48 GMT   |   Update On 2020-05-26 06:48 GMT
ரியல்மி பிராண்டின் புதிய ஆண்ட்ராய்டு டிவி ரூ. 12 ஆயிரம் பட்ஜெட்டில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.



ரியல்மி பிராண்டு இந்தியாவில் புதிய ரியல்மி ஸ்மார்ட் டிவி மாடல்களை அறிமுகம் செய்துள்ளது. இவை 43 இன்ச் ஃபுல் ஹெச்டி மற்றும் 32 இன்ச் ஹெச்டி ரெடி மாடல்களில் கிடைக்கின்றன. 

இரு மாடல்களிலும் க்ரோமா பூஸ்ட் பிக்ச்சர் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. புதிய ரியல்மி ஸ்மார்ட் டிவி பெசல்-லெஸ் டிசைன் கொண்டிருக்கிறது. இத்துடன் நெட்ஃப்ளிக்ஸ், யூடியூப், பிரைம் வீடியோ மள்ளும் லைவ் சேனல் உள்ளிட்ட செயலிகள் பிரீ இன்ஸ்டால் செய்யப்பட்டுள்ளது. 

ஆண்ட்ராய்டு 9 இயங்குதளம் கொண்டிருக்கும் ரியல்மி டிவி மாடல்களில் பில்ட் இன் க்ரோம் காஸ்ட் கொண்டிருக்கிறது. இதனுடன் வழங்கப்படும் ரிமோட் யூடியூப், நெட்ஃப்ளிக்ஸ், பிரைம் வீடியோ, கூகுள் அசிஸ்டண்ட் உள்ளிட்ட சேவைகளுக்கு ஷார்ட்கட் பட்டன்களை கொண்டிருக்கிறது. 

மேலும் 24 வாட் அவுட்புட் வழங்கும் ஸ்பீக்கர்கள் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் 1.1 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் கார்டெக்ஸ் ஏ53 மீடியாடெக் பிராசஸர், மாலி 470 எம்பி3 GPU, 1 ஜிபி ரேம், 8 ஜிபி மெமரி கொண்டிருக்கிறது. கனெக்டிவிட்டிக்கு வைபை, ப்ளூடூத் 5, 3 x ஹெச்டிஎம்ஐ, 2 x யுஎஸ்பி, SPDIF, டிவிபி டி2, ஈத்தர்நெட் போர்ட் வழங்கப்பட்டு இருக்கிறது.



புதிய ஸ்மார்ட் டிவி மாடல்களுடன் ரியல்மி பிராண்டு 10000 எம்ஏஹெச் பவர் பேங்க் 2 மாடலையும் இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. முந்தைய மாடலுடன் ஒப்பிடும் போது புதிய பவர் பேங்க் சற்று வித்தியாசமாக உருவாக்கப்பட்டுள்ளது. இதில் 18 வாட் இருவழி ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி, யுஎஸ்பி டைப் சி, யுஎஸ்பி டைப் ஏ போர்ட்கள் வழங்கப்பட்டுள்ளது.   

இந்தியாவில் ரியல்மி ஸ்மார்ட் டிவி 32 இன்ச் மாடல் விலை ரூ. 12999 என்றும் 43 இன்ச் ஃபுல் ஹெச்டி மாடல் விலை ரூ. 21999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ரியல்மி 10000 எம்ஏஹெச் பவர் பேங்க் 2 மாடல் விலை ரூ. 999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
Tags:    

Similar News