செய்திகள்
எல்.முருகன்

மத்திய மந்திரிகளின் இலாகா ஒதுக்கீடு- இணை மந்திரி எல்.முருகனுக்கு முக்கிய துறைகள்

Published On 2021-07-07 17:23 GMT   |   Update On 2021-07-07 17:23 GMT
மத்திய உள்துறை மந்திரி அமித் ஷாவுக்கு புதிதாக உருவாக்கப்பட்ட கூட்டுறவுத் துறை கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
புதுடெல்லி:

பிரதமர் மோடி தலைமையிலான மந்திரிசபை இன்று விரிவாக்கம் செய்யப்பட்டது. இன்று 43 பேர் மந்திரிகளாக பதவியேற்றனர். இவர்களில் 15 பேர் கேபினட் மந்திரிகள், மீதமுள்ள 28 பேர் இணை மந்திரிகள் ஆவர்.

இந்நிலையில் புதிய மந்திரிகளுக்கான இலாகாக்கள் மற்றும் ஏற்கனவே உள்ள மந்திரிகளுக்கு கூடுதல் இலாகாக்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. 

புதிதாக மந்திரியாக பதவியேற்ற ஜோதிராதித்ய சிந்தியாவுக்கு விமான போக்குவரத்து துறை ஒதுக்கப்பட்டுள்ளது. ஹர்ஷ வர்தன் ராஜினாமா செய்த நிலையில், அவர் வகித்து வந்த சுகாதாரத்துறை மன்சுக் மாண்டவியாவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. கூடுதலாக ரசாயனம் மற்றும் உரத்துறையும் அவருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. 



இணை மந்திரியாக பதவியேற்றுள்ள எல்.முருகனுக்கு மீன்வளத்துறை, தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை, கால்நடை மற்றும் பால்வளத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது.

அனுராக் தாக்கூருக்கு தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை, விளையாட்டு துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பியூஷ் கோயலுக்கு ஜவுளித்துறை, ஹர்தீப் சிங் புரிக்கு பெட்ரோலியத் துறை, தர்மேந்திர பிரதானுக்கு கல்வி மற்றும் திறன் மேம்பாட்டு துறை வழங்கப்படுகிறது. ஸ்மிருதி இரானிக்கு தூய்மை இந்தியா திட்டம் கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 



பிரதமர் மோடி, அறிவியல் தொழில்நுட்பத் துறையை கூடுதலாக கவனிப்பார். அமித் ஷாவுக்கு புதிதாக உருவாக்கப்பட்ட கூட்டுறவுத்துறை கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

மத்திய மந்திரியாக இன்று பதவியேற்ற அஸ்வினி வைஷ்ணவுக்கு ரெயில்வே, தகவல் தொழில்நுட்பத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது. வெளியுறவுத்துறை இணை மந்திரியாக மீனாட்சி லேகி நியமனம் செய்யப்பட்டுள்ளார். 

Tags:    

Similar News