செய்திகள்
மந்திரி சோமசேகர்

டெபாசிட்டை வாங்க காங்கிரஸ் போராடுகிறது: மந்திரி சோமசேகர்

Published On 2020-11-02 02:02 GMT   |   Update On 2020-11-02 02:02 GMT
ஆர்.ஆர்.நகர் தொகுதிக்கு நடைபெறும் இடைத்தேர்தலில் காங்கிரஸ் தோல்வி அடைந்தாலும், மோசமான தோல்வி அடைந்து விடக்கூடாது என நினைக்கின்றனர். அதனால் தான் அந்த தொகுதியில் டெபாசிட்டை வாங்க காங்கிரஸ் போராடுகிறது என்று மந்திரி சோமசேகர் கூறியுள்ளார்.
பெங்களூரு :

பெங்களூரு ஆர்.ஆர்.நகர் தொகுதி பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள மந்திரி சோமசேகர் நிருபர்களிடம் கூறியதாவது;-

ஆர்.ஆர்.நகர் தொகுதியில் பா.ஜனதா வேட்பாளர் முனிரத்னாவுக்கு மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு உள்ளது. இதுவரை தொகுதியில் முனிரத்னா செய்த வளர்ச்சி பணிக்காக மக்கள் பா.ஜனதாவுக்கு வாக்களிக்க தயாராகி விட்டனர். ஆர்.ஆர்.நகர் தொகுதியில் பா.ஜனதாவின் வெற்றி ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டுள்ளது. பா.ஜனதாவின் வெற்றி உறுதி. அதனை யாராலும் மாற்ற முடியாது.

கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவராக டி.கே.சிவக்குமார் பதவி ஏற்ற பின்பு, அவரது தலைமையில் முதல் முறையாக ஆர்.ஆர்.நகர் இடைத்தேர்தலை எதிர் கொள்கிறார். பெங்களூரு புறநகர் நாடாளுமன்ற தொகுதி எம்.பி.யாக டி.கே.சுரேஷ் இருக்கிறார். அந்த நாடாளுமன்ற தொகுதியில் தான் ஆர்.ஆர்.நகர் சட்டசபை தொகுதி இருக்கிறது.

எனவே ஆர்.ஆர்.நகர் தொகுதிக்கு நடைபெறும் இடைத்தேர்தலில் காங்கிரஸ் தோல்வி அடைந்தாலும், மோசமான தோல்வி அடைந்து விடக்கூடாது என டி.கே.சிவக்குமாரும், டி.கே.சுரேசும் நினைக்கின்றனர். அதனால் தான் அந்த தொகுதியில் டெபாசிட்டை வாங்க காங்கிரஸ் போராடுகிறது. அதற்காக தான் சகோதரர்கள் போராடுகிறார்கள். தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கூட்டளி ஆட்சி பிடிக்காததால் தான் காங்கிரசில் இருந்து விலகி பா.ஜனதாவில் சேர்ந்துள்ளேன்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News