செய்திகள்
அதிமுக

எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழா-அ.தி.மு.க. அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம்

Published On 2020-01-13 10:30 GMT   |   Update On 2020-01-13 10:30 GMT
ஊரக உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக அடைந்திருக்கும் மக்கள் செல்வாக்கு மற்றும் மகத்தான வெற்றி ஆகியவற்றை மக்களிடம் விளக்கும் வண்ணம் பொதுக்கூட்டங்கள் வருகிற 21-ந்தேதி முதல் 24-ந் தேதி வரை 4 நாட்கள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை:

அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்- அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

அ.தி.மு.க. நிறுவனத் தலைவர் எம்.ஜி.ஆரின் 103-வது பிறந்த நாள் விழா கொண்டாட்டம்.

இந்திய மாநிலங்களில் மிகச்சிறந்த நல்லாட்சி நடைபெறும் முதன்மை மாநிலம் என்று துறைதோறும் முதலிடம் பெற்று வரும் தமிழ்நாடு அரசாம் கழக அரசின் சாதனைகள்.

நாங்குநேரி, விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தல்களில், அ.தி.மு.க. பெற்றிருக்கும் மாபெரும் வெற்றியின் சிறப்பு.

ஊரக உள்ளாட்சித் தேர்தலில் அ.தி.மு.க. அடைந்திருக்கும் மக்கள் செல்வாக்கு மற்றும் மகத்தான வெற்றி ஆகியவற்றை மக்களிடம் விளக்கும் வண்ணம் பொதுக்கூட்டங்கள் வருகிற 21-ந்தேதி முதல் 24-ந் தேதி வரை 4 நாட்கள் நடைபெறும்.

அதே போல், 25-ந்தேதி அ.தி.மு.க. மாணவர் அணியின் சார்பில், அமைப்பு ரீதியான மாவட்டத் தலைநகரங்களில் வீரவணக்க நாள் பொதுக்கூட்டங்கள் நடைபெறும்.

எம்.எல்.ஏ.க்கள் தங்கள் தொகுதிக்குட்பட்ட இடங்களில் நடைபெறும் பொதுக்கூட்டங்களில் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றுவார்கள்.

இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.
Tags:    

Similar News