செய்திகள்
கோப்புபடம்

ஜார்க்கண்டில் 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து

Published On 2021-06-10 16:49 GMT   |   Update On 2021-06-10 16:49 GMT
கொரோனா பாதிப்பை தொடர்ந்து பல்வேறு மாநிலங்களும், 12ம் வகுப்பு வாரிய தேர்வுகளை ரத்து செய்து அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றன.
ராஞ்சி:

இந்தியாவில் கொரோனா தொற்றின் 2வது அலையில் மக்கள் அதிகளவில் பாதிப்படைந்து உள்ளனர்.  இதனை முன்னிட்டு பல்வேறு மாநிலங்களும் ஊரடங்கு கட்டுப்பாடுகளை கடுமையாக்கி உள்ளன.

கொரோனா பாதிப்புகளை முன்னிட்டு சி.பி.எஸ்.இ. 12ம் வகுப்பு தேர்வுகள் ரத்து செய்யப்படுகின்றன என மத்திய அரசு அறிவித்தது.  மாணவ மாணவியரின் நலனை கவனத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளது என அரசு தெரிவித்துள்ளது.

இதனை தொடர்ந்து பல்வேறு மாநிலங்களும், 12ம் வகுப்பு வாரிய தேர்வுகளை ரத்து செய்து அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றன.

இந்நிலையில், ஜார்க்கண்டில் கோவிட்-19  நிலைமையைக் கருத்தில் கொண்டு, இந்த ஆண்டிற்கான 10 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வுகளை ரத்து செய்ய ஜார்க்கண்ட் கல்வி கவுன்சில் முடிவு செய்துள்ளதாக மாநில தகவல் மற்றும் மக்கள் தொடர்பு இயக்குநரகம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக அம்மாநில முதல்-மந்திரி ஹேமந்த் சோரன் டுவிட்டர் பதிவில், 

இந்த கல்வி ஆண்டில் ஜார்க்கண்ட் கல்வி கவுன்சில் நடத்தவிருக்கும் 10 மற்றும் 12 வது தேர்வுகளை ரத்து செய்ய முடிவு செய்துள்ளேன் என பதிவிட்டுள்ளார்.

டெல்லியில் கொரோனா பரவல் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட 9 மற்றும் 11ஆம் வகுப்பு தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக மாநில துணை முதல்-மந்திரி மணீஷ் சிசோடியா அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News