உள்ளூர் செய்திகள்
இறையமங்கலம் இளைய பெருமாள் கோவிலில் தேர்த்திருவிழா நடைபெற்றபோது எடுத்தபடம்.

இளையபெருமாள் சாமி தேர்த்திருவிழா

Published On 2022-04-17 08:09 GMT   |   Update On 2022-04-17 08:09 GMT
திருச்செங்கோடு அருகே இளையபெருமாள் சாமி தேர்த்திருவிழா நடைபெற்றது.
திருச்செங்கோடு:

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டை அடுத்த ஏ.இறையமங்கலம் இளையபெருமாள் என்கிற பிரசன்ன வெங்கட்ரமண சாமி கோவில் திருவிழா கடந்த 10ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 

விழா 5ந் நாளான 14ம் தேதி திருக்கல்யாண வைபம் நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்வான தேர் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இளையபெருமான மற்றும் ஆஞ்சநேயர் சாமிகள் திருத்தேர்கள் வடம் பிடிக்கப்பட்டது. 

விழாக்குழுவினர் மற்றும் முன்னாள் எம்எல்ஏ சுந்தரம், முன்னாள் எம்பி பி.ஆர். சுந்தரம் ஆகியோர் வடம்பிடித்து  தொடங்கி வைத்தனர். தொடர்ந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு திருத்தேர் வடம் பிடித்து இழுத்தனர்.

இந்த நிகழ்ச்சியில் பெருமாள்சாமியை குலதெய்வமாக கொண்ட சேலம், ஈரோடு, நாமக்கல் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கில் வந்து கலந்து கொண்டனர். 

தேர் மலையை சுற்றியபடி 6 மணிக்கு நிலை வந்து சேர்ந்தது. திருவிழாவையொட்டி மொளசி போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
Tags:    

Similar News