ஆன்மிகம்
கபிஸ்தலம் அருகே உச்சிமாகாளியம்மன் கோவில் குடமுழுக்கு

கபிஸ்தலம் அருகே உச்சிமாகாளியம்மன் கோவில் குடமுழுக்கு

Published On 2021-02-16 07:46 GMT   |   Update On 2021-02-16 07:46 GMT
கபிஸ்தலம் அருகே உள்ள கீழ கபிஸ்தலம் பூக்கார தெருவில் உச்சிமாகாளியம்மன் கோவிலில் குடமுழுக்கும் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
கபிஸ்தலம் அருகே உள்ள கீழ கபிஸ்தலம் பூக்கார தெருவில் உச்சிமாகாளியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் குடமுழுக்கு விழாவையொட்டி கடந்த 14-ந்தேதி காலை 9 மணிக்கு மகா கணபதி ஹோமம், வாஸ்து சாந்தி, கோபூஜை, காவிரியில் இருந்து புனித நீர் எடுத்து வருதல் நிகழ்ச்சி ஆகியவை நடந்தது. தொடர்ந்து விக்னேஸ்வர பூஜை, யாக சாலை பூஜைகள் நடந்தது.

பின்னர் கடம் புறப்பாடு நடந்து, காலை 9.45 மணிக்கு விமான குடமுழுக்கும், 10 மணிக்கு குடமுழுக்கும் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இரவு அம்மன் வீதிஉலா நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை குடமுழுக்கு பொறுப்பாளர்கள் சீமான் ஆசிரியர், ராஜா, கோவிந்தராஜன், கார்த்திகேயன், ரவிச்சந்திரன் மற்றும் கிராமமக்கள் செய்திருந்தனர்.
Tags:    

Similar News